கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்,
அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் பொங்கல்
சிறப்பாக ஜனவரி 9ம் தேதி
வெளியாக உள்ள படம் ‘என்னை
அறிந்தால்’ . படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
அஜித்தின்
55வது படமான இப்படத்தின் டீஸர்
இன்று சரியாக நள்ளிரவு 12மணிக்கு
வெளியாக உள்ளது. படத்தின்
இசை உரிமையை சோனி நிறுவனம்
பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த
அதிகாரப்பூர்வ தென்னிந்திய சோனி இசை நிறுவனத்தின்
ட்விட்டர் பக்கத்தில் கௌதம் மேனனுடன் மீண்டும்
இணைந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர். மேலும்
ஓரே இரவில்
#YennaiArindhaalSonyMusic இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
இதற்கு
முன்பு ‘வாரணம் ஆயிரம்’, விண்ணைத்தாண்டி
வருவாயா’, நீதானே என் பொன்வசந்தம்’
உள்ளிட்ட கௌதம் மேனன் படங்களின்
இசை உரிமத்தை சோனி நிறுவனம் பெற்றது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment