தன் மகள் கல்யாணத்துக்கு நேரில் அழைப்பு கொடுத்தும் வாலி வரவில்லையே, என்று ரஜினி வருத்தப்பட்டார். ஆனால் அந்த திருமணம் நடந்த நாள் தன் மனைவியின் நினைவு நாள் என்பதால்தான் பங்கேற்கவில்லை. குழந்தைகளை வீட்டிலிருந்தே ஆசீர்வதித்தேன், என்று சமாதானப்படுத்தினார் கவிஞர் வாலி.
'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் திரைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டன.
இந்த விழாவில் பங்கேற்ற ரஜினி பேசியதாவது:
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எண்ணம் முதலில் இல்லை. கமல் கூட கேட்டார். வேறு நிகழ்ச்சிக்குப் போய் வரும் வழியில், இந்த நிகழ்ச்சிக்கு வரலியான்னு வைரமுத்துவும் கேட்டார். நான் வரலேன்னு சொல்லிட்டேன்.
காரணம், நான் வாலி சாருக்கு நேரில் போய் என் மகள் சௌந்தர்யா கல்யாண அழைப்பு கொடுத்தேன். ஆனால் அவர் வரலை. என்கிட்டே சொல்லியிருக்கலாம். நல்ல பிரண்ட்ஸா, வாய்யா போய்யான்னுதானே பழகறோம். என்கிட்ட வர்றேன்னு சொல்லிட்டு வரல. எதுக்கு இப்போ நாம மட்டும் போகணும்? என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் வந்துட்டேன்.
பெரியவர்கள் பலர் இங்கே அமர்ந்துள்ளீர்கள். சந்தோஷமா இருக்கு. எனக்கு முதலில் வாய்ஸ் குடுத்தது எம்எஸ்வி சார். 'மண வினைகள் யாருடனோ...' , மூன்று முடிச்சு பாட்டு. அதுக்கு அடுத்து நினைத்தாலே இனிக்கும் படத்தில் கூட சிவசம்போ பாட்டுக்கு அவர்தான் குரல் கொடுத்தார்.
பைரவி படத்துல எனக்காகக் குரல் கொடுத்தவர் டிஎம்எஸ் அவர்கள். அந்தப் பாட்ட டிஎம்எஸ் பாடும்போது, நான் அதை அப்படியே பாத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம்தான் அந்தப் பாட்டுக்கு நான் நடிக்கப் போறேன்னு. இவங்க எல்லாரையும் ஒரே மேடையில பார்க்கிறது சாதாரண விஷயம் இல்ல.
வாலி சாரைப் பத்தி என்ன சொல்றதுன்னே தெரியல. மிகப் பெரிய திறமைசாலி. ஷங்கர் புதுசு புதுசா தேடறவர். அவ்வளவு ஈஸியா திருப்திப்படுத்த முடியாது. ஆனா அவரே அப்பலருந்து இப்ப வரைக்கும் ஏதாவது கஷ்டமான பாட்டுன்னா உடனே வாலி சார்கிட்டதான் கொடுப்பார். எங்கிருந்து எங்க வருது பாருங்க. ஒரு பெரியவராச்சேன்னு தயங்க வேண்டியதில்லை. ஒரு இளைஞனை மாதிரி. என்னய்யா வேணும்னு கேப்பார். சும்மா அள்ளிக் கொடுப்பார்.அது எப்படித்தான் வருதோ தெரியல. அதெல்லாம் வரப்பிரசாதம்.
அந்த வெத்தலபாக்குதான்... சந்திரமுகில, ரொம்ப ட்ரை பண்ணி்யும் பாட்டு அமையல. அப்போ வெத்தல பாக்கு போட்டு துப்பிட்டு வந்து, தேவுடா தேவுடா ஏழுமல தேவுடான்னு எழுதினார்... யாரும் பேசவே இல்லை அதுக்கப்புறம்!
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாங்... எம்ஜிஆர் சாருக்கு 'நான் ஆணையிட்டால்...' என்று பாட்டு எழுதிய மாதிரி எனக்கு 'அம்மா என்றழைக்காத...' பாடலை எழுதினார் வாலி. அதைவிட ஒரு பாட்டு வருமா?
ஒரு முறை மேடையி்ல் நான் ஏதோ சொன்னேன்... அதுக்கு அவர் சொன்னார்... என்ன பண்றதுப்பா, கல்லறைக்குப் போகும் வரை சில்லரை தேவைன்னாரு.
ராமாயணத்துல வர்ற வாலி மாதிரியானவர்தான் இவரும். இந்த வாலிக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் பாதி பலம் வாலிக்கே போய்விடும். அவர் எதிரில் உட்கார்ந்து என்னய்யா வேணும்னு கோட்டார்னா.. அவ்வளவுதான் பினிஷ். வாலி இன்னும் பல ஆண்டுகள் நல்ல நலத்துடன் இருந்து தமிழ் மக்களுக்கு நிறைய பாடல்கள் மூலம் சந்தோஷத்தைக் கொடுக்கணும்னு வேண்டிக்கறேன்..." என்றார்.
வாலியின் சமாதானம்..
ரஜினிக்கு சமாதானம் சொல்லும் விதத்தில் பின்னர் பேசிய வாலி, "சௌந்தர்யா திருமணத்தின் போது என் மனைவியின் நினைவு நாள் என்பதால் கலந்து கொள்ள முடியவில்லை. குழந்தைகள் நீண்ட ஆரோக்கியம் - சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். ஆனால் இதை நான் அவருக்குச் சொல்லியிருக்கலாம். அதே நேரம், எத்தனை உரிமையோடு அவர் கேட்கிறார் பாருங்க... அதுதான் இந்த வாலிக்கு சந்தோஷமா இருக்கு!," என்றார்.

வாலி 1000 விழாவின் அருமையான போட்டோக்கள்
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
போட்டோக்கள் அனைத்தும் மிகவும் அருமை.வெல்டன்.
ReplyDeleteஅரவரசன்.
@NAGA
ReplyDeleteநன்றி நண்பா...
அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்
ReplyDeleteசூப்பர்
வாலிப கவிஞர் வாலி அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்
கருத்துரை வழங்குவதில் comment settings சென்று வேர்டு வெரிபிகேஷனை நீக்கி விடுங்கள்...
ReplyDeleteவேர்டு வெரிபிகேஷன் ஆப்ஷனில் no கொடுத்து save செய்துவிடுங்கள்
கருத்துரை வழங்குவதற்கு சுலபமாக இருக்கும்
நன்றி
@மாணவன்
ReplyDeleteநீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் நண்பரே!
தகவலுக்கு நன்றி நண்பா ...