மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி-அனுஷ்கா திருமணத்தை முதல்வர் கருணாநிதி இன்று நடத்தி வைத்தார்.
முதல்வரின் பேரனும், அழகிரியின் இளைய மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சீதாராமனின் மகள் அனுஷ்காவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதற்காக தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை 9.50 மணியளவில் நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். அவர் தாலியை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி அனுஷ்கா கழுத்தில் கட்டினார் தயாநிதி அழகிரி.
கோவில்களில் அன்னதானம்:
திருமணத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளிகள், முதியோர் இல்லங்கள், ஆரவற்றோர் அமைப்புகளின் மையங்கள், கோவில்களில் இன்று அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சின்ன சொக்கிகுளத்தில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பள்ளி, செனாய் நகரில் உள்ள சேவாலய பள்ளி, திருப்பாலையில் உள்ள லவ் அண்டு கேர் மையம், பைக்காராவில் உள்ள நாராயண குரு முதியோர் இல்லம், பசுமலையில் உள்ள பாரதி முதியோர் இல்லம், பரவையில் உள்ள பார்வையற்ற குழந்தைகளுக் கான பள்ளி.
நத்தம் சாலையில் உள்ள சேவா ஆசிரமம், ஆரப்பாளையத்தில் உள்ள அபோர்டு பள்ளி, கூடல் நகரில் இருக்கும் ஈமா மையம், சுந்தர்ராஜன் பட்டியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளி ஆகியவற்றில் இலவச மதிய உணவு வழங்கப்படும்.
அதேபோல கே.கே.நகரில் உள்ள என்.எம்.ஆர். ஆதரவற்றோர் பள்ளி, பசுமலை இன்பா இல்லம், கிருஷ்ணாபுரம் காலனியில் உள்ள நாகராஜ் இல்லம், கே.புதூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம், அழகர்கோவில் சாலையில் உள்ள ஆக்சீலியம் ஆங்கிலப்பள்ளி, வில்லாபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி, முத்துப்பட்டியில் உள்ள உபகார் மையம், ஆரப்பாளையத்தில் உள்ள ஆப்பிள் கிட் மையம் ஆகிய இடங்களில் உள்ள அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.
மேலும், மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஒத்தக்கடையில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலகலப்பான வரவேற்பு:
முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்தநிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 6.35 மணியளவில் மணமகன் துரை தயாநிதி, மணமகள் அனுஷா ஆகியோரை கயல்விழி-வெங்கடேஷ், அஞ்சுக செல்வி-விவேக் தம்பதியினர் அழைத்துச் சென்று வரவேற்பு மேடையில் அமர வைத்தனர்.
இரவு 7.10 மணிக்கு முதல்வர் கருணாநிதி வந்தார். அவர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு வரவேற்பு மேடை அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தார். இரவு 8 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்து மணமக்களை வாழ்த்தினார்.
தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரண், கூடுதல் டிஜிபி ராஜேந்திரன்,
தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஜீத், பாக்கியராஜ், பிரபு, அவருடைய அண்ணன் ராம்குமார், வடிவேலு, மாதவன், சூரியா, அவருடைய தம்பி கார்த்தி, சிவா, நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன்,இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குநர் பாலா, கவிஞர் பா.விஜய், இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த்,
மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல், ஜி.கே.வாசன், நெப்போலியன், அனைத்து தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்கள் போக பல்துறைப் பிரமுகர்களும் வந்திருந்தனர்.
முதல்வர் குடும்பத்திலிருந்து மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், பேரன் உதயநிதி ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன்கள் மு.க.முத்து, மு.க.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாட்டுப் பாடிய சம்பந்திகள்:
அனைவரின் எதிர்பார்ப்பும் திருமணத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜா வருவாரா என்பதில்தான் இருந்தது. இருப்பினும் முதல்வருடன் சேர்ந்து ராஜாவும் வந்திருந்தார்.
கோட், சூட்டில் படு கம்பீரமாக காணப்பட்டார் மு.க.அழகிரி. அதை விட ஆச்சரியமாக, மேடையேறி அவர் இரண்டு பாடல்களையும் பாடி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த பாடல்களை முதல்வர் கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப பாடினார் அழகிரி. ஒரு பாடலோ சோலோவாகவும், இன்னொரு பாடலை, சம்பந்தி சீதாராமனுடன் இணைந்தும் பாடினார்.
கங்கை அமரன் குழுவினர் இசைக் கச்சேரியைக் கலக்கிக் கொண்டிருந்தபோது அழகிரியையும், சீதாராமனையும் அழைத்த முதல்வர் கருணாநிதி படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் பொன் ஒன்று கண்டேன் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து சம்பந்திகள் இருவரும் மேடையேறி மைக்கைப் பிடித்து அப்படியே பாடினார்கள். இதைப் பார்த்து முதல்வர் உள்பட அனைவரும் குஷியுடன் ரசித்தனர். அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
பாடலை பாடி முடித்து விட்டுத் திரும்பிய அழகிரி மறுபடியும் மேடைக்கு வந்தார். இந்தமுறை தனக்கு மிகவும் பிடித்த பாடலான கண்ணெதிரே தோன்றினாள் பாடலைப் பாடி அசத்தினார். எழுதி வைக்காமல் அப்படியே அவர் பாடியதைக் கேட்டு வரவேற்புக்கு வந்திருந்தவர்களும், அழகிரி ரசிகர்களும் அசந்து போய் விட்டனர்.
இப்படியாக படு கோலாகலமாக, குஷியாக, ஜாலியாக நடந்து முடிந்தது அழகிரி மகன் திருமண வரவேற்பு.

திருமணத்திற்குப் பின்னர் முதல்வர் பேசுகையில்,
இது திருமண விழா என்றாலும் அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தும் விழாவாக அமைந்துள்ளது. மேலும், திமுக, காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தும் விழா.
காங்கிரசும், திமுகவும் நாட்டின் நலனுக்காக எவ்வாறு பாடுபடுகிறதோ அதேபோன்று மணமக்கள் வாழ்க்கை கூட்டணியை வெற்றிகரமாகத் தொடர வேண்டும்.
இந்த விழாவில் கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் இருவரான மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டுள்ளனர். இது நமது கூட்டணியின் வலுவைக் காட்டுகிறது என்றார்.
கூட்டணி தொடரும்-பிரணாப்:
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
நாட்டின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் பாடுபடும் இந்த கூட்டணி இனியும் நீடிக்கும். இந்த கூட்டணி கடந்த 2004-ம் ஆண்டு முதல் உறுதியாக உள்ளது. இனியும் அவ்வாறே இருக்கும்.
கலைஞர் இந்தியா மதிக்கும் தலைவர்களில் ஒருவர். அவர் இல்லத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில், முதல்வர் கருணாநிதி 6-வது முறையாக முதல்வர் ஆவார் என்று கூறினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் பேசுகையில்,
மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று சிறப்பாக நீடூழி வாழ வேண்டும். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனபதில் அகர முதல எழுத்தெல்லாம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவிற்கு உண்மை அழகிரி முதற்றே மதுரை என்றார்.
தமிழ்த் தாத்தா கருணாநிதி-திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பேசுகையில், முதல்வர் கருணாநிதி மணமகன் தயாநிதிக்கு மட்டும் தாத்தா கிடையாது அவர் ஒரு தமிழ் தாத்தா. மணமக்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்தினார்.
தாத்தாவின் பெருமையும், தந்தையின் திறமையும்...
கவிஞர் வைரமுத்து பேசுகையில்,
நீங்கள் யாரைப் போல் வாழ வேண்டும் என்று வெளியே உதாரணம் தேவையில்லை. உள்ளே உதாரணம் இருக்கிறது.
தமிழகத்தின் 5 முறை முதல்வராக இருந்த பெருமைப் பெற்றவவர். தமிழகத்தின் மூத்த படைப்பாளி. கவி, நாடக ஆசிரியர், வசனகர்த்தா, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை உயர்த்திய பெருமகன் என பல பெருமைகளை உடையவர் முதல்வர் கருணாநிதி.
உங்கள் தாத்தாவும், அவர் பெருமையும் போல வாழுங்கள். உங்கள் தந்தையும் அவரது திறமையும் போல வாழுங்கள் என்றார்.
கலைஞருக்கு 2 சொத்து: ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,
எப்பவுமே அமைச்சர் அழகிரி கூட 10, 15 பேர் பேசிக்கிட்டு இருப்பார்கள். நான் துணை முதல்வர் ஸ்டாலின் கூட நிறைய பழகியிருக்கிறேன். அமைச்சர் அழகிரி கூட அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை. இருந்தாலும் அவர் காட்டிய அன்பு என்னை கவர்ந்தது.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்தினார்.
மறுபடியும் நமக்கே வெற்றி-திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில்,
இந்த திருமண விழா உங்களுக்கு ஒரு குடும்ப விழா போல் தெரிகிறது. ஆனால் எனக்கு அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை நாங்கள்தான் கைப்பற்ற போகிறோம் என்று தெரிகிறது. ஒன்று சேர்ந்து நிற்கிறோம் என்று சொல்லுவதாக தெரிகிறது.
அமைச்சர் அழகிரி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தயாநிதி ஆகியோர் ஒரே மேடையில் நின்று, ஒரே களத்தில் நின்று திருமணத்தை நடத்தி வைக்கின்ற காட்சி அப்படித்தான் தோன்றுகிறது என்றார்.

ama romma avasiyam
ReplyDeletepoluran