நாம் யாருக்காவது இ மெயில் அனுப்பும் பொது நமக்கு இருக்கும் ஒரே கவலை நாம் அனுப்பிய இ மெயில் சரியாக சென்றடைந்ததா? அதை சம்பந்தப்பட்டவர் திறந்து படித்தாரா ? என்பது தான் . நமக்கு இந்த தகவல்கள் தெரிவது இல்லை. சம்பந்தப்பட்டவர் நமது இ மெயிலை படித்துவிட்டு பதிலனுப்பினால் தான் உண்டு. இல்லையென்றால் நாம் சிரமப்பட்டு அனுப்பிய இ மெயிலின் இலக்கு நிறைவேறியதா என தெரியாமல் போகும்.
இந்த சிக்கலை போக்குவதற்கு ஒரு வழியிருக்கிறது. இதெற்கென சாப்ட்வேர் ஒன்று இருக்கிறது இந்த சாப்ட்வேர் நமது இ மெயிலுடன் சென்று, இ மெயிலை பெற்றவர் திறந்து படித்த உடன் நமக்கு தகவை அனுப்பி வைக்கும் .
இதற்கு www.spypig.com என்ற இந்த இணையத்தளம் இந்த வசதியை இலவசமாக வழங்குகிறது. இ மெயிலை டைப் செய்து அனுப்புவதற்கு தயாராக வைத்துக்கொண்டு , இந்த www.spypig.com இணையத்தளத்திற்கு சென்று, நாமது இ மெயில் முகவரி நாம் அனுப்பப்போகும் இ மெயிலின் முகவரி மற்றும் பொருள் (subject) போன்றவற்றை அளிக்க வேண்டும். அடுத்தது அதே இணையத்தளத்தில் இருக்கும் பன்றி பொம்மைகளில் நமக்கு பிடித்தமான பொம்மையை காப்பி செய்ய வேண்டும். உடனே அதற்க்கு கீழே உள்ள மெனுவில் நொடிகள் காட்டப்படும். அதில் அளிக்கப்படுள்ள நேரத்திற்குள் பன்றி பொம்மையை நாம் கம்போஸ் செய்துள்ள இ மெயிலுடன் ஒட்டி (paste) அனுப்ப வேண்டும்.
சம்பந்தப்பட்ட இ மெயிலை பெற்றவர் அதை திறந்து படிக்கும் பொது, உடனடியாக நமது இ மெயிலுக்கு அந்த தகவல் அனுப்பப்படும். அதன் மூலம் நாம் அனுப்பிய இ மெயிலை சம்பந்தபட்டவர் படித்துள்ளாரா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இன்னும் நீங்கள் அனுப்பும் இ மெயிலை படித்தார்களா இல்லையா என்று கவலை பட்டு கொண்டு இருக்க வேண்டாம் இல்லையா...?
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன்
Ithu spam.. kavanama pavikkavum nanri
ReplyDelete