நடிகர் விஜயகுமாருக்கும் மகள் வனிதாவுக்கும் இடையே எழுந்த மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தினமும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா, தனது 2வது கணவர் ஆனந்தராஜூடன் நேற்று சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதன்பிறகு வெளியே வந்த வனிதாவை சூழ்ந்து கொண்டு நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.
“அப்பா மீது போலீஸ் டிஜிபியிடம் நான் கொடுத்த புகார் மனுவை, சென்னை புறநகர் கமிஷனருக்கு மாற்றியுள்ளார். அந்த மனுவை புறநகர் கமிஷனரிடம் கொடுக்க இங்கு வந்தேன். புகாரை கமிஷனரிடம் கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட அவர், துணை கமிஷனர் விசாரிப்பார் என உறுதி அளித்தார். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு குழந்தை, பெற்ற தாயிடம்தான் இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் தெரியும். எனது குழந்தையை என்னிடம் கொடுக்க வேண்டும். அதற்காக யாரிடமும் பர்மிஷன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மீடியாக்களில் வதந்தி பரப்புகிறார்கள். பைத்தியம், லூசு என்கிறார்கள். நான் பைத்தியமும் இல்லை. லூசும் இல்லை. அப்பாவையும் பார்ப்பேன், ஆத்தாவையும் பார்ப்பேன்” என்று ஆக்ரோஷத்துடன் கூறினார்.
அமெரிக்காவில் அருண் விஜய்:
நடிகர் அருண் விஜய் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப் படுவது குறித்து வனிதா கூறுகையில், “புறநகர் போலீஸ் கமிஷனரை சந்தித்தேன். அவர் என் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நான் யார் மீது புகார் கொடுத்தேனோ அவரை விஜயகுமார் நாடு கடத்தி விட்டார். மகனை நாடு கடத்தி விட்டு நாடகம் ஆடுகிறார் விஜயகுமார். என் பிரச்சினை அமெரிக்க தூதரகம் வரை சென்று விட்டதால் அருண் விஜய்யை சீக்கிரம் பிடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன். விஜயகுமார் எதுவும் பேசாமல் இருந்தால் பிரச்னை வராது” என்றார்.
ithellam oru kudumbam... vidunga sir...
ReplyDelete