நாம் இணையத்தளங்களில் வீடியோக்களை டவுன்லோடு செய்யும்போது நமக்கு ஏற்ப்படும் பெரியபிரச்சனை வீடியோக்களின் வடிவங்கள் தான் நமக்கு தேவையான வடிவங்களில் வீடியோக்கள் கிடைப்பதில்லை இதனால் இணையத்தளங்களில் இருக்கும் வீடியோக்களை நமது கணினி, ஐபாட், மொபைல் போனுக்கு டவுன்லோடு செய்யும்போது வடிவங்கள் பொருந்தாமல் சிக்கல் ஏற்ப்படும் . இதனால் நாம் நமக்கு தேவையான வீடியோக்களை டவுன்லோடு செய்து அதன் பிறகு அதன் வடிவங்களை மாற்றுவதற்கான மென்பொருளை டவுன்லோடு செய்து அதன் உதவியால் நமக்கு தேவையான வடிவத்திற்கு மாற்றி நாம் பயன்படுத்துகிறோம். அனால் வீடியோ கன்வேட்டர் மென்பொருள் இல்லாமலே ஆன்லைனிலேயே நாம் நமது வீடியோவை நமக்கு தேவையான வடிவத்தில் மாற்றிக்கொள்ளலாம் .
இணையத்தளங்களில் இருக்கும் வீடியோக்களை நாம் 3gp, mp4, wmv, mpeg, mov, swf, avi, mp3, flv, wav, ஆகிய வடிவங்களுக்கு மாற்றலாம். அதற்கு நாம் http://www.all2convert.com/ என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் மாற்ற விரும்பும் வீடியோவை அதற்க்கான மெனுவில் இணைத்து, தேவைப்படும் வடிவத்தை தேர்வு செய்தால் போதும்,நாம் தேர்வு செய்த வடிவத்திற்கு வீடியோ மாறிவிடும். அதன் பிறகு நமது கணினி, ஐபாட், மொபைல் போனுக்கு டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இன்னும் 'வீடியோ கன்வேட்டர்' மென்பொருள் தேவையில்லை தானே ...?
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ..
அருமையான தகவல் நன்றி சகோதரம்.
ReplyDeleteஅன்புச் சகோதரன்
ம.தி.சுதா
mathisutha.blogspot.com