Monday, November 8, 2010
டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி , ஆட்ட நாயகனாக ஹர்பஜன்சிங் ...
நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. ஹர்பஜன் சிங் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் போட்டு ஆட்டம் டிராவில் முடிய உதவினார்.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதலாவதுடெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 487 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து சரியான பதிலடி கொடுத்து 459 ரன்களைக் குவித்தது.
பின்னர் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஆரம்பத்தில் பலத்த சரிவைச் சந்தித்தது. ஆனால் வால் வரிசை வீரர் ஹர்பஜன் சிங்கும், வி.வி.எஸ்.லட்சுமணும் இணைந்து அணியைக் காப்பாற்றி கரை சேர்த்து விட்டனர்.
இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் ஹர்பஜன் சிங் போட்ட அபார சதம்தான். 115 ரன்களைக் குவித்தார் ஹர்பஜன். இது அவருக்கு முதல் டெஸ்ட் சதமாகும். அது மட்டுமல்லாமல், முதல் தரப் போட்டிகளிலும் இதுவே அவரது முதல் சதம்.
அவரும் லட்சுமணும் (91) இணைந்து 7வது விக்கெட்டுக்கு 163 ரன்களைக் குவித்தனர்.
முன்னதாக நேற்று 6 விக்கெட்களை இழந்து 82 ரன்களில் அல்லாடிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை தனது ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. இருப்பினும் ஹர்பஜனும், லட்சுமணும் பொறுமையுடன் ஆடி நியூசிலாந்துக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டனர்.
இந்தியா 2வது இன்னிங்ஸை 266 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தது. இதனால் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தைத் தொடங்கியது நியூசிலாந்து. இருப்பினும் ஆட்டம் முடிவடைந்தபோது அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகனாக ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
interesting match
ReplyDelete