ரஜினியின் அடுத்த படம் எது என்ற கேள்வி தான் ரஜினியின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார்? கதாநாயகி யார்? இது போன்ற பல கேள்விகள் திரைப்பட ஆர்வலர்களால் கேட்க்கபடுகிறது. பல இயக்குனர்கள் வரிசையில் நிற்கிறார்கள் அதில் முக்கியமானவர் ரஜினியை வைத்து சந்திரமுகி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பி.வாசுவும் ஒருவர். இவர் சந்திரமுகி 2 உருவாக்கி ரஜினிக்காக காத்திருக்கிறார் ஏற்கனவே இந்த படத்தை கன்னடத்தில் இயக்கி அங்கு அதன் வெற்றி கோடியை பறக்க விட்டு விட்டார் அதையே இப்போது ரஜினியை வைத்து தமிழில் எடுப்பதற்காக ரஜினிக்கு தகுந்தபடி மாற்றங்களை செய்துள்ளார். இதன் பிறகு என்ன நடந்து நடந்தது ?
கதையை எழுபது சதவீதம் முடிச்சிட்டேன். இனி கொஞ்சம்தான் என்கிறார் பி.வாசு.குப்புற தள்ளிய குதிரையாக போய்விட்டது குசேலன். இந்த முறை அதிர அதிர இருக்கணும் நம்ம ஸ்டெப் என்று அவர் நினைப்பதால்தான் இத்தனை மெனக்கீடு! சந்திரமுகி பார்ட் 2 தான் பி.வாசுவின் அடுத்த டார்கெட்!
தமிழில் இப்படத்தை தயாரிக்கும் போது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதை நிறைவேற்றுவது போல இருக்க வேண்டும் ஒவ்வொரு காட்சியும். அதிலும் ரஜினியிடம் கதை சொல்லும் போது அவர் உடனே சரி சொல்கிற அளவுக்கு இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தாராம். ஆனால் கதையை கேட்ட ரஜினி, "பேசாம இந்த படத்தை நீங்க தெலுங்கு வெங்கடேஷை வச்சு பண்ணலாமே" என்று ஐடியா கொடுத்தாராம்.
அதனால் முதலில் இந்த கதையை எடுத்துக் கொண்டு தெலுங்கு பக்கம் போகப் போகிறார் பி.வாசு. இது டபுள் ஆக்ஷன் கதையல்ல. 'ட்ரிபிள்' ஆக்ஷன் கதையாம். வெங்கடேஷ் மூன்று வேடத்தில் நடித்தால் அதிரடியாக இருக்கும் என்பது ரஜினியின் எண்ணம். ரஜினியின் யோசனையை நிறைவேற்ற தயாராகிவிட்டார் பி.வாசு. ஆனால் வெங்கடேஷை புக் பண்ணுவதற்கு முன்பே அனுஷ்காவை சந்தித்து கதையை சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டாராம்.
லக லக லக.... மாதிரி, இதில் என்ன வைத்திருக்கிறாரோ?
No comments:
Post a Comment