தினமும் பெண்களுக்கு எதிரான பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அது தொடர்பான போராட்டங்களும் அறிக்கைகளும் பார்த்தும், படித்தும், கேட்டும் தான் நமக்கு பழக்கம். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமான செய்தி, ஆமாங்க, ஒரு பொண்ண 3, 4 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததை பற்றி நாம் கேள்விப்பட்டி இருப்போம். ஆனால் ஒரு சிறுவனை 10 பெண்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர் என்றால் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது அல்லவா?
ஆஸ்திரேலியாவில் 17-வயது பள்ளி மாணவனை கத்திமுனையில் 10 பெண்கள் பாலியல் பலாத்காரம் சிட்னியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் ஏ.ஏ.பி. எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆஸ்திரேலியாவின் தெற்கு ஹைலட்ஸ் மாகாணத்தில் கடந்த வாரம் பள்ளி சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை 10 பெண்கள் திடீரென வழிமறித்தனர். சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை காட்டி மிரட்டினர் இதில் 4 பெண்கள் அந்த சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவனிடம் பாலத்காரம் செய்த பெண்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடான பாப்புவா நியூகினியா நாட்டினைச் சேர்ந்தவர்கள். தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு ஏதேனும் எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாதிப்பு வந்துவிடும் என அஞ்சுவதாகவும், தன்னை பாலத்காரம் செய்த பெண்களுக்கு ஏதேனும் எச்.ஐ.வி. உள்ளனவா என சோதனை செய்யும்படியும் கூறியுள்ளான். ஐ.நா. அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகின் அதிகம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள நாடு பாப்புவா நியூ கினியா தான் என கூறப்படுகிறது. அதனாலேயே அந்த சிறுவன் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு வந்துவிடுமோ என பீதியில் உள்ளதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும் போது அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தானோ என்று எண்ண தோன்றுகிறது. அண்மையில் 'பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள் அமைப்பு' என்று ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிய வில்லை.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
kashtamda samy
ReplyDelete