இயோன்பியாங் தீவில் தென்கொரிய ராணுவத்தினர் கடந்த 5 நாட்களுக்கு முன் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது வடகொரியாவிலிருந்து சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ராணுவ முகாம்கள் மற்றும் வீடுகள் பலத்த சேதமடைந்தன. 2 வீரர்கள் உட்பட 4 பேர் பலியாயினர். இந்த தாக்குதலையடுத்து இயோன்பியாங் தீவில் ராணுவத்தை குவித்தது தென்கொரியா. அமெரிக்க போர்க் கப்பல் யு.எஸ்.எஸ். ஜார்ஜ் வாஷிங்டன் கொரிய தீபகற்ப பகுதிக்கு விரைந்தது. அமெரிக்க கடற்படையும், தென்கொரிய கடற்படையும் இணைந்து நேற்று போர் ஒத்திகையில் ஈடுபட்டன. வடகொரியா தனது எல்லையில் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருந்தது.
இந்நிலையில் வடகொரியா பகுதியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து இயோன் பியாங் தீவில், உடனடியாக போர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பதுங்கு குழிக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. போர் வீரர்கள், போலீசார், நிருபர்கள் என எல்லோரும் பதுங்கு குழிக்கு சென்று மறைந்தனர். ஆனால், குண்டு வீச்சு தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. சிறிது நேரத்தில் வெடிச் சத்தம் ஓய்ந்தது. அதையடுத்து எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. தென்கொரிய ராணுவத்தை பீதியடைய செய்வதற்காக, வடகொரியா டம்மி குண்டுகளை வெடித்ததாக தெரிகிறது

இப்படி பட்டாசு வெடிக்க வச்சு எல்லாம் பயம் காட்டலாமா ..!? அட, நமக்கு தெரியாம போச்சே தீபாவளிக்கு வாங்கின பட்டாசு நிறைய இருக்கு, கொஞ்சம் காஷ்மீர் பக்கமா கொண்டு போய் வெடிக்க வச்சிருக்கலாம் .. பரவால்ல ...பரவால்ல.. கிறிஸ்த்துமஸ் , புத்தாண்டு வருதுல்ல அப்போ வச்சுக்கலாம் பகிஸ்தன்காரங்களுக்கு எல்லாவரும் நிறைய பட்டாசு வாங்குங்கப்பா....
No comments:
Post a Comment