ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 3 ம் நாள் ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் லட்சுமண் ஆகியோரது அபார ஆட்டத்தினால் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 436 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2 வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து இருந்தது.
ஷேவாக் சதத்தை தவறவிட்டார். 96 ரன்னில் `அவுட்' ஆனார். டிராவிட் 7 ரன்னிலும், தெண்டுல்கர் 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இன்று 3 வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள்.
ஆனால் தெண்டுல்கர், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வெட்டோரி பந்தில் 13 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 184 ரன்னாக இருந்தது.
4 வது விக்கெட்டுக்கு டிராவிட்டுடன், லட்சுமண் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்தனர்.
மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்க்கு 237 ரன் எடுத்தது. டிராவிட் 33 ரன்னுடனும் லட்சுமண் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து ஆடிய டிராவிட் 144 பந்துகளில் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து லட்சுமணுடன் ரெய்னா கைகோர்த்தார்.
அதனைத் தொடர்ந்து லட்சுமண் பொறுப்புடன் ஆடி, தனது சொந்த மண்ணில் 50 ரன்னை கடந்தார்.
இந்நிலையில் ரெய்னா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, லட்சுமணனுடன் தோனி களமிறங்கினார். ஆனால் அவரும் 14 ரன்னில் ஆட்டமிழந்ததால், தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட லட்சுமண், மார்ட்டின் வீசிய பந்தில் எதிர்பாராத விதமாக எல்.பி.டபிள்யூ ஆகி, 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்பஜன்சிங்கும், ஜாகீர்கானும் பொறுப்புடன் ஆடியதால், ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்க்கு 436 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து பவுலர் டேனியல் வெட்டோரி 123 ரன்கள் கொடுத்து, 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சௌத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்பஜன் சிங் 85 ரன்களுடன் களத்தில் உள்ளார். 82 பந்துகளில் அவர் இந்த ஸ்கோரை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள 9 ஆவது அரை சதம் இது. நாளை அவர் சதத்தை நிறைவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. ஸ்ரீசாந்த் 14 ரன்களுடன் மறுமுனையில் களத்தில் உள்ளார்.

ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ....
No comments:
Post a Comment