நம்மில் பலருக்கு டைரி எனப்படும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருக்கும் அது மிகவும் அவசியமான பழக்கமும் கூட , நம் வாழ்வில் நேற்று நடந்த விசயங்களே இன்று நினைவில் இருப்பது இல்லை ஆனால் நாட்குறிப்பு இறந்த காலத்தில் நடந்த விசயங்களை எதிர்காலத்தில் அறிந்து கொள்ள உதவும் . நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தால் மனநலம் சிறப்பான நிலையில் இருக்கும் என மனநல மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
ஆனால், நாம் நமது டைரியில் எழுதும் தனிப்பட்ட விஷயங்கள் சில முள்ளமாரிங்க கையில் கிடைத்தால் அவ்வளவுதான் அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் அதை வைத்து நம்மை மிரட்ட ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமின்றி அவசர வாழ்க்கை காரணமாக பலருக்கு டைரி எழுத ஆர்வம் இருந்தும், டைரி வாங்கி , நேரம் ஒதுக்கி எழுத நேரம் இருக்காது. இவர்களுக்காகவே இந்த இணையத்தளம் உள்ளது.
http://penzu.com என்ற இந்த இணையத்தளம் ஆன்லைனில் டைரி எழுதும் வசதியை வழங்குகிறது. இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவச உறுப்பினர் ஆவதன் மூலம் எத்தனை பக்கம் வேண்டுமானாலும் எழுதலாம். டைரியை போன்று கோடு போடப்பட்ட பக்கங்களை வழங்குவது சிறப்பு. நாம் எழுதிய டைரியை ஆன்லைன் மூலம் நமது நண்பர்களுக்கோ அல்லது காதலிக்கோ அனுப்பி வைக்கல்லாம் (காதலிக்கு அனுப்புறதா இருந்தா காதலி பற்றி நல்ல விதமா எழுதி அனுப்புங்கப்பா). அது மட்டுமில்ல நமது பெயர் அடையாளம் எதுவுமின்றி மற்றவர்களுக்கு நமது டைரியை அனுப்பி வைக்கும் வசதியும் உண்டு .
டைரி எழுதும் ஆர்வம் உள்ளவர்களும் , டைரியில் எழுதும் விசயங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் பயன்படுத்த வேண்டிய இணையத்தளம் இது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment