இன்றைய காலக்கட்டத்தில் சிபாரிசு என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது எங்கும் எதிலும் எதற்கும் சிபாரிசு தேவைப்படுகிறது. இதற்காகவே சிலர் பெரிய ஆள்களின் பழக்கத்தை நாடி செல்வார்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுவர் இறுதியில் அவர்களிடம் இருந்து வாங்கி கட்டிகொள்வதும் உண்டு.முன்பெல்லாம் திறமையில்லாத நபர்களுக்குத்தான் சிபாரிசு தேவைப்பட்டது. ஆனால் இப்போது திறமை இருந்தாலும் ஒரு பக்கம் காசும் மறு பக்கம் சிபாரிசும் தேவைப்படுகிறது. அது மட்டுமின்றி இன்று படித்த திறமைசாலிகள் அதிகரித்துள்ளதால் போட்டியும் கடுமையாக உள்ளது. இந்த சிக்கலுக்கெல்லாம் விடை சொல்லுவது போல் உள்ளது இந்த இணையத்தளம்.
ஆம், உங்களுடன் படித்த நண்பர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கலாம், முன்பு உங்களுடன் வேலை பார்த்த நபர் அமெரிக்காவில் வேலை செய்யலாம், இப்படி நமக்கு தெரிந்த நண்பர்களையும் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களையும் தொடர்பு கொள்ள உதவும் தளம் இது. இதன் மூலம் வேலை வாய்ப்புகளை பற்றிய தகவல்களை பெறலாம். இந்த இணையத்தளத்தில் வேலை தேடுபவர்களும் வேலை கொடுப்பவர்களும் அங்கம் வகிக்கின்றனர். பொதுவாக வேலை தேடுபவர்களுக்கும் வேலை கொடுப்பவர்களுக்கும் உதவும் இணையத்தளம் தான் இது.
www.linked.com என்ற இந்த இணையத்தளம்அடிப்படையில் இது ஒரு குழு இணையத்தளம் என்றாலும், பெரும்பாலான குழு இணையத்தங்களை போல் வெட்டி அரட்டை, தமாசுகளுக்கு இங்கு இடமில்லை. இந்த இணையத்தளத்தில் இலவசமாக உறுப்பினராகி நாம் நம்மை பற்றி அளிக்கும் தகவல்களே நமது ரெசியூம் என கருதப்படும். நாம் வேலை செய்யும் துறை சார்ந்த முகம் தெரியாத பிரபலங்கள் கூட நம்மோடு பழகலாம் அவர்களுக்கு நமது நடத்தையின் மீது நமது திறமையின் மீதும் நம்பிக்கை வரும் பட்சத்தில் நம்மை அவர்கள் நிறுவனத்தில் வேலையில் அமர்த்துவார்கள். ஏன் வாய்ப்பிருந்தால் பில்கேட்ஸ் கூட உங்களுக்கு நண்பராகலாம். பில்கேட்ஸ் நண்பரான பிறகு நீங்கள் வேலையில்லாத பட்டதாரியாக இருக்க முடியுமா என்ன ? (பில்கேட்ஸ் நண்பரானா நம்ம பத்தியும் கொஞ்சம் நல்ல விதம்ம்ம்மா ... சொல்லுங்கப்பா ) எனவே வேலையில் உள்ளவர்கள் வேலை தேடுபவர்கள் என எல்லோருமே ' பழக வந்திருக்கோம்' என களத்தில் குதிக்கலாம்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
வர இருப்பது ...
15 நிமிடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இ-மெயில் ஐ.டி
ம்ம், சிபாரிசு இல்லாமல் வேலைக்கு சேர்வது கடினம் தான்.
ReplyDeletewww.linked.com போல பல தளங்கள் கண்டிப்பாக தேவை
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
ReplyDeletewww.ellameytamil.com