உலகையே தமிழன் பக்கம் திரும்பி பார்க்கவைத்த ஒரு தலைவன் உண்டு என்றால் அது தமிழ் தலைவன், தமிழுக்கே தலைவனான பிரபாகரன் தான் என்றால் அது மிகையல்ல. உலகிலேயே மிக மிக குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழியை பேசும் மக்களில் இருந்து ஒரு தலைவன் உலக நாடுகளுக்கே சிம்மசொப்பனமாக விளங்கியதால் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து செய்த தந்திரம் இல்லை இல்லை சதியால் நம் தலைவனின் வீரம் மற்றும் விவேகத்தின் மீது கொண்ட அச்சத்தால் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து தமிழனின் உணர்வு போராட்டமான விடுதலை போராட்டத்தை தற்காலிகமாக வென்று இருக்கிறது. (வென்றிருக்கிறார்கள அல்லது விடுதலை புலிகள் மற்றும் தலைவரின் இந்த அமைதி கூட ராஜத்தந்திரமாக இருக்கலாம்).
பல லட்சம் மக்களை ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் கொண்டு வந்து. அதன் மூலம் விடுதலை புலிகளுக்கும் நமது தலைவனுக்கும் நெருக்கடியை கொடுத்து அதாவது இத்தனை தமிழ் மக்களின் உயிரா அல்லது லட்சியமா ? என்று தலைவனை யோசிக்க வைத்து' மக்களில்லாமல் மண்ணை வென்று யார் வாழ? போராட்டமே எம் தமிழ் மக்கள் வாழ வேண்டி சுதந்திர பூமிக்காக தானே? அப்படி இருக்க மக்களை இழந்து மண்ணை வென்று என்ன பலன் எமக்கு எம் மக்கள் உயிர் தான் முக்கியம் " என்று முடிவெடுத்து. அதன் மூலம் மக்களின் உயிரை காக்க வெள்ளை கொடியேந்தி வந்த வீரர்களை கோழைத்தனமாக சுட்டு கொன்று. எப்படி எல்லாமோ கோல்மால் செய்து வென்று விட்டதாக கொக்கரித்து , தலைவனை கொன்று விட்டதாக நாடகம் ஆடி உலக நாடுகளையே தற்காலிகமாக நம்ப வைத்து (உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம் தான் தலைவன் இறப்பு பற்றிய செய்தி ) கொட்டமடிக்கும் நயவஞ்சக நாய்களின் முகத்திரை கிழிய போகிறது. உண்மையின் முகம் உலகிற்கு வெளிப்பட போகிறது, உலகின் அனைத்து மக்களும் ஆச்சரியத்தின் விழும்பிற்கே போக போகிறார்கள், நம் தமிழ் தலைவன் வெளிப்பட போகிறான்....(தலைவன் இறப்பு பற்றிய செய்தி பொய் என நிரூபணமானால் தலைவன் வெளியுலகிற்கு வந்து தானே ஆக வேண்டும் ). உலக தலைவர்கள் அனைவரும் வெட்கத்தால் அவமானம் தாங்காமல் தமிழன் முன்னால் தலைகுனிய போகிறார்கள். ஆம் இன்று உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உலகை அதிர வைக்கும் இணையத்தளம் ‘விக்கிலீக்’ இலங்கையின் இறுதி கட்ட போர், மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் மற்றும் முன்னணி தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றிய செய்தியை விரைவில் வெளியிட போவதாக அறிவித்துள்ளார்கள்.
ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்தது என்னவென்ற மர்மத்துக்கு விக்கிலீக் ஆவணங்களில் விடை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ரகசிய தகவல் தொடர்புகள் குறித்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் ராஜரீக உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் சிக்கியுள்ளன.
அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப் பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜாங்கத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரும் நாட்களில் இவை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
போரின் இறுதி நாட்களில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டது மற்றும் புலிகளின் முதல்கட்ட தலைவர்கள் என்ன ஆனார்கள் போன்றவற்றுக்கான பதில்கள் இந்த ஆவணங்களில் இருக்கும் எனத் தெரிகிறது.

எப்போதும் மீடியாக்களை பொறுத்த வரையில் அதிர்ச்சியான, நம்பமுடியாத உண்மைகளை, வரலாற்றையே புரட்டி போடும் நிகழ்வுகளை மக்களை காக்கக வைத்து தலைவர்களை நடுங்க வைத்து இறுதியில் வெளியிடுவது தான் வழக்கம். இதுவரையில் இது தான் நடந்து இருக்கிறது. அப்படி பார்க்கும் பொது இப்போ 'விக்கிலீக்' வெளியிட்டு இருக்கும் ரகசியங்கள் சும்மா டிரைலர் தான், மெயின் பிச்சர்(தமிழ் தலைவன் பற்றியது) இன்னும் தான் போல தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் நம் தலைவன் இருக்கிறான் என்ற நல்ல செய்தியை அவர்கள் ஆதார பூர்வமாக வெளியிட்டு குலைத்து கொண்டு இருக்கும் தெருநாய்களின் ஆணவத்துக்கு முற்று புள்ளி வைப்பார்கள் என நம்புவோம்! கடவுளிடம் வேண்டுவோம் நல்ல செய்தி நம்மை வந்து தழுவுவதற்கு ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment