நாம் பிள்ளைகளை பெற்று வளர்த்தவர்கள். நம்மைப் போல அவர்களும் பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கும் போதுதான் அந்த வலியை உணர்வார்கள். இதற்குமேல் என் பெற்ற மனமும் பெருகும் கண்ணீரும் வார்த்தைகளை சொல்ல இடம் கொடுக்கவில்லை என்று மகள் வனிதாவின் சரமாரி புகார்கள் குறித்து கூறியுள்ளார் நடிகர் விஜயக்குமார்.
நடிகர் விஜயக்குமார், அவரது மகனும் நடிகருமான அருண் விஜய், சகோதரிகள் ஸ்ரீதேவி, ப்ரீதா, ப்ரீதாவின் கணவரான இயக்குநர் ஹரி ஆகியோர் மீது சரமாரியான புகார்களை சுமத்தியுள்ளார் முன்னாள் நடிகையும், விஜயக்குமாரின் மகளுமான வனிதா.
மேலும் விஜயக்குமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. அதையெல்லாம் சொன்னால் நாறிப் போய் விடும். அவற்றையெல்லாம் நான் வாராவாரம் சொல்வேன் என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
தன்னை விஜயக்குமாரும்,அருண் விஜய்யும் அடித்து உதைத்ததாக டிஜிபியிடமும் நேரில் புகார் கொடுத்துள்ளார். மதுரவாயல் போலீஸார் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.
மகள் வனிதாவின் இந்த அதிரடி ஆவேச புகார்கள் குறித்து விஜயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
வனிதா என் பெயரை கெடுக்கிறார். பிள்ளைகளை பெத்து வளர்த்து ஆளாக்குவது பெற்ற தாய், தந்தையர் பெயரையும் குடும்பத்தின் பெயரையும் காப்பாற்றுவதற்குத்தான். அந்த பெயரை கெடுப்பதற்காக அல்ல. நடந்ததை மறைத்து நடக்காத ஒன்றை நடந்ததை போல் செய்தி வெளியிட்டு என்னையும், என் மகன் அருண்விஜய்யையும் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் என்மேல் அன்பு கொண்ட அனைவரின் மனதையும் புண்படுத்தி இருக்கிறார் வனிதா.
வனிதா என் மகள் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு வேதனையிலும், வெட்கத்திலும் இருக்கிறேன். இதுக்கு மேல் என் குடும்பத்துக்கும், வனிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இனியும் இதுபோல தவறான செய்தியை வனிதா வெளியிட்டாலோ, தன்னோட சுயலாபத்துக்காக என் பெயரை பயன்படுத்தினாலோ அவர் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
நாம் பிள்ளைகளை பெற்று வளர்த்தவர்கள். தம்மைப் போல அவங்களும் பிள்ளைகளை பெத்து வளர்த்து ஆளாக்கும் போதுதான் அந்த வலியை உணர்வார்கள். இதற்குமேல் என் பெற்ற மனமும் பெருகும் கண்ணீரும் வார்த்தைகளை சொல்ல இடம் கொடுக்க வில்லை என்றார் அவர்.

இதற்கிடையில் மகளும், முன்னாள் நடிகையுமான வனிதா கொடுத்துள்ள புகாரைத் தொடர்ந்து போலீஸார் தேடத் தொடங்கியிருப்பதால் கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக நடிகர் விஜயக்குமார், அவரது மனைவி நடிகை மஞ்சுளா, முதல் தாரத்து மகன் அருண் விஜய் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
வனிதா விஜயக்குமார், மதுரவாயல் காவல் நிலையத்தில் தனது தந்தை, சகோதரர் அருண் விஜய், தங்கை கணவர் இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் மீது சரமாரியான புகார்களைக் கூறியுள்ளார். இந்த நிலையில் அதிரடியாக வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீஸார் கைது செய்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, டிஜிபி லத்திகா சரணை நேரில் சந்தித்து விஜயக்குமார் குடும்பம் மீது பல்வேறு புகார்களை சுமத்தி மனு அளித்தார்.
இதையடுத்து நேற்று மதுரவாயல் போலீஸார் விஜயக்குமார், அருண் விஜய் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், போலீஸார் விஜயக்குமார், மஞ்சுளா, அருண் விஜய்யை விசாரிக்க முடிவு செய்தனர். இதையடுத்து மூன்று பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது வீடுகளில் மூன்று பேரும் இல்லை. எங்கு போனார்கள் என்று தெரியில்லை.
அவர்களைப் போலீஸார் தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.

kalai kudumbathin x mas release ....
ReplyDelete