உலகின் ஒரே வல்லரசு நாடாகிய அமெரிக்கா இன்று உலகின் அனைத்து நாடுகளையும் தங்கள் கட்டுப்பாடில் வைத்திருக்க துடித்து கொண்டிருக்கிறது. அவ்வபோது தனது ஏகாதிப்பத்தியத்தை மற்ற நாட்டுகள் மீது காட்டவவும் தவறுவது இல்லை .
இப்படி ராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தனிப்பெரும் நாடாக விளங்கும் அமெரிக்கா பாதுகாப்பு விசயத்திலும் எறும்பு கூட இவர்களுக்கு தெரியாமல் புக முடியாது என்று தான் 2001 செப்டம்பர் 11 வரை நினைத்து கொண்டு இருந்தார்கள் மற்ற உலக நாடுகளும் அப்படி தான் நினைத்தது ஆனால் 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டைகோபுர தாக்குதல் அமெரிக்காவை மட்டும் அன்றி உலக மக்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதன் பிறகு அதை போன்ற சம்பவங்கள் பெரிய அளவில் நடக்காமல் பார்த்து கொண்டது அமெரிக்க அரசு . ஆனால் இன்று அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரை பகுதியில் மர்ம ஏவுகணை பறந்தது பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 35 மைல் தொலைவில், கலிபோர்னியா கடல்பகுதி அருகே வானில் ஏவுகணை ஒன்று பறந்தது. அதன் புகை தடத்தை ஹெலிகாப்டரில் சென்ற பத்திரிக்கையாளர்கள், தங்கள் கேமராவில் பதிவு செய்து பென்டகன் அதிகாரிகளிடம் கொடுத்தனர். இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க கடல் பகுதியில் எந்த வித ராணுவ பயிற்சியும் நடைபெறவில்லை. தனியார் ஆயுத நிறுவனங்கள் ஏவுகணை சோதனை நடத்தியிருந்தால், அது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்திருப்பர். அப்படி எந்த தகவலும் இல்லாமல், ஏவுகணை பறந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. வெளிநாட்டு போர் கப்பல்கள், அமெரிக்கா அருகே போர் பயிற்சி மேற்கொள்வதற்கான வாய்ப்பும் இல்லை என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எங்கிருந்து ஏவுகணை வீசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவத்தின் மாஜி துணை அமைச்சர் ராபர்ட் எல்ஸ்வொர்த், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணை வீசப்பட்டிருக்கலாம் என்றார்.
மீண்டும் ஒரு செப்டெம்பர் 11 நிகழ்ச்சி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது அமெரிக்க அரசின் கடமையாகும். நாமும் மீண்டும் அது போன்ற ஒரு கொடூரத்தாக்குதல் உலகில் எங்கும் நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுவோம்.
ஐயோ ... ஏன்தான் இப்படி அடிசிக்கிரான்களோ தெரியல்லையே நானும் இங்க வந்து பொறந்தேனே ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
ஐயோ ... ஏன்தான் இப்படி அடிசிக்கிரான்களோ தெரியல்லையே நானும் இங்க வந்து பொறந்தேனே ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment