இன்ஸ்டன்ட் மெசேஜ்களை அனுப்புபவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை இரண்டு. ஒன்று - எல்லா கம்ப்யூட்டர்களிலும் மெசஞ்சர் சேவையை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியாது போவது. இரண்டு ஏகப்பட்ட இன்ஸ்டன்ட் மெசஞ்சர் சேவைகள் வந்து விட்டன. அனைத்து கணக்குகளையும் இயக்க வேண்டுமெனில் தனித்தனியாக லாகின் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் ஏற்படும் காலவிரயம் இரண்டாவது பிரச்சினை.
இந்த இரண்டு வகையான பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் ஒரே இணையத்தளம் மூலம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர் கணக்குகளை இயங்கும் வசதியை இந்த இணையத்தளம் வழங்குகிறது. இந்த இணையத்தளத்திற்கு சென்று, யாகூ, கூகுள் டாக், எம்.எஸ்.என், ஏ.ஒ.எல் போன்ற இணையத்தளங்களின் மெசஞ்சர்களை இலவசமாக, எளிமையாக பயன்படுத்தலாம்.
உதாரணமாக யாகூ மெசஞ்சர் வசதியை பயன்படுத்த முதலில், இந்த இணையத்தளத்தில் யாகூவுக்கு என அளிக்கப்பட்டுள்ள பகுதியில் யாகூ இமெயில் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை அளிக்க வேண்டும். உடனே யாஹூ மெசஞ்சர் வசதி கிடைக்கும். அதன் மூலம் தேவைப்படும் நபர்களுக்கு இன்ஸ்டன்ட் மெசேஜ்களை அனுப்பலாம்.
யாகூ வசதியை பயன்படுத்தும் அதே பக்கத்தில் இருக்கும் கூகுள் டாக், எம்.எஸ்.என், ஏ.ஒ.எல் முதலிய சேவைகளையும் சம்பந்தப்பட்ட லாகின் மூலம் பயன்படுத்தலாம். இதற்கென தனியாக லாகின் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் ஒரே குடையின் கீழ் அனைத்து மெசஞ்சர் சேவைகளையும் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
No comments:
Post a Comment