விபத்துக்கள் மனித சமுதாயம் எவ்வளவு வளர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு விபத்துக்களும் அதிகரித்துள்ளது . பல விபத்துக்கள் கவனக்குறைவினாலேயே நடக்கிறது. அது மட்டுமின்றி விபத்துக்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளும் காரணமாக அமைகிறது. தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகளால் ஏற்படும் பிரச்சனைகள் அதனால் ஏற்படும் மன உளைச்சல் ஆதலான் ஏற்ப்படும் கவனகுறைவுகளும் விபத்துக்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்ததாக போதிய ஓய்வு இன்மை, வேலைப்பளு அதனால் ஏற்படும் களைப்பு அதனால் வரும் தூக்கமின்மையும் விபத்துக்களுக்கு காரணமாய் அமைகிறது. ஆம், பலபேர் தூக்கத்திலேயே வாகனங்களை ஓட்டி சென்று அதனால் விபத்து ஏற்பட்டு பல உயிர் இழப்புகள் ஏற்ப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
அண்மையில் மங்களூரில் நடந்த விமான விபத்தை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விடுவதற்கில்லை . விபத்து நடந்த பொது விபத்துக்கு காரணமாக பல
காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதற்கான உண்மையான காரணம் இப்போது
தெரிய வந்துள்ளது
மங்களூர் விமான விபத்திற்கு முழு காரணம் விமான பைலட் தான் காரணம் என்று
தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் மங்களூர் விமானம் விபத்துக்குள்ளானதில் 158
பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்
உட்பட மொத்தம் 166 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். இதுதொடர்பாக தீவிர
விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதுகுறித்த அறிக்கையை மத்திய
விமானப் போக்குவரத்துதுறை அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது.
அதில் பைலட் ஜிலாட்கோ குலூசியா விமானத்தில் 90 நிமிடங்கள் தூங்கியுள்ளார்.
இதனையடுத்து விமானம் தரையிறங்கும் முன்பாக கட்டுப்பாட்டு அறைக்கு
முறையான தகவலை அளிக்காததால் தான் விமான விபத்து நடக்க நேரிட்டது.
எனவே விமான விபத்து நடைபெற பைலட் தான் காரணம் என அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment