எய்ட்ஸ் இன்று மனிதனை ஆட்டிப்படைக்கும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது. மனிதனின் இச்சைகாளால் அவனே விலை கொடுத்து வாங்கி கொள்ளும் வினை இல்லை இல்லை உயிரை கொல்லும் விஷம். மனிதன் செய்யும் தவறுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனையே எய்ட்ஸ். அறிவியலும், மருத்துவ உலகமும் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும் இந்த நோயை பொறுத்த மட்டில் பின் தங்கியே உள்ளது இந்த இரண்டு துறைகளும்.
இந்த நோயினால் தவறு செய்பவர்களை விட அவர்களால் குழந்தைகளும் அவர்களது வாழ்க்கை துணைகளும் பாதிக்கப்படுவது தான் தாங்க முடியாத துயரம். எங்கே இதற்கொரு தீர்வு கிடைக்காதா ? என்று ஏங்கியவர்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோயை தடுக்க புதிய மாத்திரையை அமெரிக்க டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர், `துருவதா' எனப்படும் அந்த மாத்திரையை இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் சாப்பிட்டால் `எய்ட்ஸ்' கிருமிகள் அணுகாது என கலிபோர்னியா பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வுக்காக பிரேசில், பெரு, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, ஈக்குவடார் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த 2500 ஆண்களிடம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது, எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் வரை குறைந்திருப்பது தெரிய வந்தது. இந்த மாத்திரையை சாப்பிட்டாலும் பாதுகாப்பான உடலுறவை தொடருவது சிறந்தது என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஒரு ஆண்டுக்கு `துருவதா' மாத்திரையை சாப்பிட எவ்வளவு செலவு தெரியுமா? ரூ.7 லட்சம்
இதற்கு முன் இதை போன்று பல தடவை மருந்து கண்டு பிடித்து விட்டதாக வந்த செய்திகளை போல் இல்லாமல் இந்த செய்தியாவது உண்மையாக இருக்கட்டு. எய்ட்சால் பாதிக்கப்பட்டோர்களுக்காக இல்லை என்றாலும் அவர்களது குடும்பத்திற்காக.
No comments:
Post a Comment