திருமணம் மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு காரணமானது. மனித வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம். மனிதனின் பழக்கவழக்கங்கள் நாட்டுக்கு நாடு மாறு படலாம் ஆனால் அனைத்து நாட்டிலும் அனைத்து மொழி பேசுபவர்களாலும், அனைத்து இனமக்களாலும், அனைத்து மத மக்களாலும் மனித சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு புனிதமானது திருமணம் .
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல மறக்க முடியாத நிகழ்வுகளை விட்டு செல்லும் வாழ்வின் ஒரு அங்கம் . எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கெல்லாமோ திரிந்து எத்தனை பேரை வாழ்க்கையில் சந்தித்தாலும் நாம் வாழ்வில் இறுதி வரைக்கும் நம்மோடு சேர்ந்து வாழ ஒரு துணையை நம்மோடு சேர்த்து கொள்ளும் அந்த நாள் நம்முள் விட்டு செல்லும் அடையாளங்கள் எண்ணற்றவை. வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அதை நினைத்து நினைத்து சந்தோசப்படும் தருணங்கள் ஏராளம்... ஏராளம்...
ஒவ்வொரு மனிதனும் தனக்கு பின்னால் ஒரு சமுதாயத்தை விட்டு செல்வதற்கான அடித்தளமாக அமைவது தான் திருமணம், புதிய புதிய உறவுகளின் சங்கமம், புதிய புதிய பிறப்புகளின் ஆரம்பம் , மொத்தத்தில் மனித சமுதாய சுழற்சியின் அச்சாணி . இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருமணத்தின் அனைத்து நிகழ்சிகளும் முதலில் நம் மனதில் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு தான் நாம் நமது திருமண நிகழ்சிகளை நாம் போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருப்போம்..
ஆனால், சீன மக்கள் எதை எதை நினவு பொருளாக பாதுகாக்கலாம் என்ற ஆர்வ கோளாறு காரணமாக சீனாவில் புது மணத் தம்பதிகளிடம் புதுவகை கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இருவரும் சேர்ந்து முழு நிர்வாண நிலையில் அல்லது அந்தரங்க உறுப்புகளை மட்டும் மறைத்தபடி ஜோடியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார்களாம். அந்த புகைப்படத்தை தங்களின் திருமண வாழ்வின் நினைவு சின்னமாக பாதுகாத்து வைத்துக்கொள்ள விரும்புவதாக சீன புதுமண தம்பதிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு தடை விதிக்க வேண்டும் என திருமண போட்டோகிராபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்க துணைத் தலைவர் ஹி லினா கூறுகையில், புதுமணத் தம்பதிகள் நிர்வாண போட்டோ எடுப்பது சீன கலாசாரம் அல்ல. திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இது போன்ற போட்டோக்கள் எடுக்கும் ஸ்டுடியோவுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். லியு சுன்கான் என்ற வழக்கறிஞர் கூறுகையில், நிர்வாண போட்டோ சட்ட விரோதம் அல்ல. ஆனால், அதை பொதுமக்களிடம் பரப்பினால் ஆபாச பட பிரிவின் கீழ் குற்றம் சாட்டலாம் என்றார்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல மறக்க முடியாத நிகழ்வுகளை விட்டு செல்லும் வாழ்வின் ஒரு அங்கம் . எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கெல்லாமோ திரிந்து எத்தனை பேரை வாழ்க்கையில் சந்தித்தாலும் நாம் வாழ்வில் இறுதி வரைக்கும் நம்மோடு சேர்ந்து வாழ ஒரு துணையை நம்மோடு சேர்த்து கொள்ளும் அந்த நாள் நம்முள் விட்டு செல்லும் அடையாளங்கள் எண்ணற்றவை. வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அதை நினைத்து நினைத்து சந்தோசப்படும் தருணங்கள் ஏராளம்... ஏராளம்...
ஒவ்வொரு மனிதனும் தனக்கு பின்னால் ஒரு சமுதாயத்தை விட்டு செல்வதற்கான அடித்தளமாக அமைவது தான் திருமணம், புதிய புதிய உறவுகளின் சங்கமம், புதிய புதிய பிறப்புகளின் ஆரம்பம் , மொத்தத்தில் மனித சமுதாய சுழற்சியின் அச்சாணி . இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருமணத்தின் அனைத்து நிகழ்சிகளும் முதலில் நம் மனதில் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு தான் நாம் நமது திருமண நிகழ்சிகளை நாம் போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருப்போம்..
ஆனால், சீன மக்கள் எதை எதை நினவு பொருளாக பாதுகாக்கலாம் என்ற ஆர்வ கோளாறு காரணமாக சீனாவில் புது மணத் தம்பதிகளிடம் புதுவகை கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இருவரும் சேர்ந்து முழு நிர்வாண நிலையில் அல்லது அந்தரங்க உறுப்புகளை மட்டும் மறைத்தபடி ஜோடியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார்களாம். அந்த புகைப்படத்தை தங்களின் திருமண வாழ்வின் நினைவு சின்னமாக பாதுகாத்து வைத்துக்கொள்ள விரும்புவதாக சீன புதுமண தம்பதிகள் தெரிவிக்கின்றனர்.
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
ReplyDeletewww.ellameytamil.com