தலைப்பை பார்த்ததும் இது என்னடா 'கஜினி' சூர்யா மாதிரி ஒரு இ மெயில் ஐ.டி யா என்றுதான் தோணுது இல்லையா ஆமாங்க ஆனால், உண்மைங்க இந்த இ மெயில் ஐ.டி 15 நிமிடம் மட்டும் தான் பயன்பாட்டில் இருக்கும் அதன் பிறகு தானே அழிந்து விடும் தன்மை கொண்டது. புதிய இணையத்தளங்களில் உறுப்பினராகும் போது, நாம் அளிக்கும் இ மெயில் முகவரியை ஸ்பாமர்கள் திருடி தேவையற்ற இ மெயில்களை அனுப்பி வைப்பார்கள். இதனை தவிர்க்க பொய்யான இ மெயில் முகவரியை அளித்தால், நம் இ மெயிலுக்கு அனுப்பப்படும் உறுப்பினராக உறுதி செய்வதற்கான இ மெயிலை பெற முடியாது. இத்தகைய சிக்கல்களுக்கு விடை சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த 15 நிமிட இ மெயில் முகவரி.
ஆம், 15 நிமிடத்துக்கு மட்டுமே ஒரு புதிய இ மெயில் முகவரி அளித்து நாம் விருப்பப்படும் இணையத்தளத்தில் உறுப்பினரானவுடன் தானாக அழிந்து போகும் விதத்தில் அமைந்துள்ளது
இதற்கு நாம் http://www.guerrillamail.com/ என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக உறுப்பினராகி இ மெயில் முகவரியை பெறலாம். ஆனால் நமது வேலையை 15 நிமிடத்தில் முடித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை 15 நிமிடத்தில் நமது வேலை முடியவில்லை என்றால் மீண்டும் ஒரு 15 நிமிடம் இ மெயிலின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்யலாம். ஆனால் அதற்குள் நமது வேலையை முடித்து கொள்ள வேண்டும் இல்லையேல் நமது முகவரி தானே அழிந்து போகும் வேலையும் தடைப்படும் . எனவே இந்த குறுகிய நேரத்தில் நமது வேலையை முடித்து கொண்டால் இ மெயில் அழிந்து போனாலும் பரவாயில்லை இல்லையா .
இப்போ ஸ்பாமர்களிடம் நமது இ மெயில் முகவரி மாட்டும் என்று கவலை பட வேண்டியது இல்லை . அவர்களும் ஏமாந்து போவார்கள் இல்லையா இது ஒரு வகையில் இணையத்தளத்தின் பெயரை போன்று ஸ்பாமர்கள் மீது கொரில்லா தாக்குதல் தான் இல்லையா. சரி சரி கிளம்புங்க கொரில்லா தாக்குதலை தொடுப்போம்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
ReplyDeletewww.ellameytamil.com