மதங்களின் பெயர்களை சொல்லி மதங்களை வைத்து அரசியல் நடத்தும் அரசியல் தலைவர்களை விட மதச்சடங்குகளுக்கும், சாஸ்த்திர சம்பிரதாயங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் பெயர் போன ஒரு தலைவர் உண்டு என்றால் அது நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் என்று சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை. இவர் நடத்திய பல பூஜைகளும், யாகங்களும் பெரிய முனிவர்களையே மிஞ்சும் விதத்தில் இருக்கும்.
இப்பொது தி.மு.க , காங்கிரஸ் கூட்டணி முறிவதற்காகவும் காங்கிரஸ் தங்களோடு ( அ.தி.மு.க) கூட்டணிக்கு வர வேண்டியும் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.
ஆம், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் தங்கியுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கிடாவெட்டி சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
கொடநாட்டில் உள்ள எஸ்ட்டேடில் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த 11ம் தேதி அங்கு போனார். அங்குள்ள தேயிலைத் தொழிற்சாலை புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதையடுத்து காலை 11 மணிக்கு உள்ளே இருக்கும் அம்மன் கோவிலில் கிடா வெட்டி சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. கிடா வெட்டு நிகழ்ச்சியில், ஜெயலலிதா கலந்து கொண்டார்.
பின்னர் தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். தொழிலாளர்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு துணிமணிகளை வழங்கிய பின்னர் பங்களாவுக்குத் திரும்பினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கோவில்களில் ஆடு, கோழி வெட்டுவதற்குத் தடை விதித்தவர் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.

எனக்கு ஒரு சந்தேகமுங்க யாரையாவது கவிழ்க்க வேண்டி பூஜை பண்ணினா கடவுள் கவிழ்த்திடுவாரா எனக்கு தெரியல்ல தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment