ஏ. ஆர்.ரஹ்மான் இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். அறிமுகமான முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்கி பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டவர் . அன்று முதல் இன்றுவரை இந்திய திரை உலகில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டு இருப்பவர்.
இவர் இந்தியாவின் நாட்டுப்பண்ணான 'வந்தேமாதரம்' பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் 'வந்தேமாதரம்' பாடலுக்கே புத்துயிர் ஊட்டினார் என்றால் அது மிகையல்ல . அண்மையில் 'slamdogmillionaire' என்ற ஆங்கில மொழி திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இதுவரை இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றதன் மூலம் உலகளாவிய புகல் பெற்றார். அதன் பிறகு அண்மையில் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக இசையமைத்தார் அந்தபாடலும் தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி வேற்றுமொழி பேசும் மக்களிடமும் புகழ் பெற்றது. அதன் பிறகு இந்தியாவில் நடந்த காமன்வெல்த் விளையாடு போட்டிக்காக பாடும் வாய்ப்பை காமன்வெல்த் அமைப்பு ஏ. ஆர்.ரஹ்மானுக்கு வழங்கி சிறப்பித்தது.
இதற்கிடையில் சீனாவில் நடைபெற்று வரும் 16 வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா நவ., 27 நடைபெறுகிறது. இந்த நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ' ஜெய் கோ ' பாடல் ஒலிக்க உள்ளது. இந்தப் பாடலை இந்தியாவின் ரவி திரிபாதி என்ற இளம் பாடகர் பாட உள்ளார். இது குறித்து ரவி கூறுகையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் ' ஜெய் ஹோ ' மற்றும் ஒரு சீனப் பாடலைப் பாடுவதை தனது வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...

No comments:
Post a Comment