தமிழ் திரைப்பட உலகில் அண்மையில் அதிகமாக பேசப்பட்ட ஒரு செய்தி என்று எடுத்துக்கொண்டால் அது 'எந்திரன்' திரைப்படத்தை பற்றிய செய்தியாக தான் இருக்கும் ஆனால், அதற்கு கொஞ்சமும் அளவுக்கு குறையாமல் பேசப்பட்ட ஒரு செய்தி நயன்தாரா பிரபுதேவாவின் கள்ள காதல் சமாசாரம் தான். ஒரு திரைப்படத்தை போன்று பரப்பரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் தினம் ஒரு செய்தி என்ற அளவுக்கு பரப்பரப்பை ஏற்படுத்தியது, ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.
நயன்தாரா தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமாகி இன்று தமிழ் திரைப்பட நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறார். இவர் தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொட்டிருக்கும் நமிதா கூட நடிக்க தயங்கும் அளவுக்கு, அவரையே மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியாக நடித்து தான் இந்த நம்பர் ஒன் இடத்துக்கு வந்திருக்கிறார்.(ஆனால் வாழ்க்கையில் மட்டும் இரண்டாம் தாரமாம்). இவர் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்(கமல் தவிர, கமல் கிட்ட மாட்டி இருந்தா இந்நேரம் பிரபுதேவா குடும்பம் தப்பி இருக்கும்.). இவருக்கு ஆரம்பம் முதலே பல காதலர்கள் உண்டு திரைப்பட துறையில். ஆமாங்க, இவங்களுக்கு திரைப்படத்தில் காதலிக்க மாதிரி நடிக்க தெரியாதுங்க நிஜமாகவே காதலிச்சிடுவாங்க. நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்தில் விஜயுடன் 'போக்கிரி' படத்தில் ஜோடி சேர்ந்தார். அந்த படத்தின் தலைப்பை போன்று இவர் பிரபுதேவா குடும்பத்தில் தனது போக்கிரித்தனத்தை காட்ட ஆரம்பித்து விட்டார். கதாநாயகனை திரைப்படத்தில் காதலிக்க சொல்லி கொடுத்த இயக்குநரையே காதலிக்கக ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம மன்மதகுஞ்சு பிரபுதேவாவும் தன்னோட லீலைகளை ஆரம்பிச்சிடாரு (இவரு வேற நிறைய பேருக்கு வலை விரிச்சு விரிச்சு பார்த்து முடியாம தான் தவிச்சு கிட்டு இருந்தாரு.)இறுதியில் 45 ஐ 23 தனது பிடிக்குள் கொண்டு வந்து விட்டது. கட்டிய மனைவிக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் துரோகம் செய்ய துணிந்து நயன்தாராவை காதலிக்கும் அளவுக்கு நயன்தாரா என்ன அவ்வளவு ஒழுக்கமான உத்தமியா? இவங்களுக்கு தான் எத்தனை காதலர்கள் ஆனாலும், அவர்களில் முக்கியமானவர் நம்ம மன்மதன் சிம்பு .
சிம்புவும் நயன்தாராவும் அடிச்ச லூட்டிய யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சிம்புவும் நயன்தாராவை தனது மன்மதன் திரைப்படத்தில் நடிக்க வைத்து நயன்தாராவை எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்தினார். அத்துடன் விட்டாரா என்ன ? ரெண்டு பேருமா அமெரிக்கா போய் அங்க இருக்கும் நயன்தாரா அண்ணனிடம் நயன்தாரா ' இது தான் அண்ணா நான் கட்டிக்க போகிறவரு ' என்று அறிமுக படுத்தி விருந்து படைத்தது எல்லாம் வேற கதை. அதன் பிறகு இருவருக்கும் இடையில் கருத்து வேறுப்பாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.என்ன கருத்து வேறுபாடு என்பது யாருக்கும் தெரியாது . (இப்போது பிரபுதேவாக்கு தெரிஞ்சு இருக்கலாம்).
சிம்பு நயன்தாரா காதல் லீலைகளின் போட்டோக்கள்.
அதன் பிறகு தான் பிரபுதேவா மாட்டினார் ஆனால் பாவம் பிரபுதேவா மனைவி ரமலத் இவங்களும் பிள்ளைகளும் என்ன பாவம் செய்தார்கள் . முதலில் பொங்கி எழுந்தார் பிரபுதேவா மனைவி ரமலத், இவருக்கு ஆதரவாக பல மகளிர் அமைப்புகளும் குரல் கொடுத்தன போராட்டங்களிலும் இறங்கினார்கள். 'நயன்தாரா தமிழ்நாட்டுக்கு வந்தால் தொடப்பகட்டையால் அடிப்போம்' என்றெல்லாம் வீரா வேசமாக பேசிய மகளிர் அமைப்புகள் இப்பொது வாய்மூடி மௌனம் காப்பது ஏனோ ?
இப்போது திருமணத்துக்கு தயார் ஆவதற்காக சினிமாவில் நடிப்பதையும் நயன்தாரா நிறுத்தி விட்டார். அவர் நெருக்கடியால்தான் திருமண அறிவிப்பை பிரபுதேவா வெளியிட்டார் என்கின்றனர்.
முதல் மனைவி ரம்லத்தை விவகாரத்து செய்யாமல் நயன்தாராவை மணந்தால் சட்ட சிக்கல் வரும் என்கின்றனர் வக்கீல்கள். பிரபுதேவாவுக்கு 5 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.
பிரபுதேவா நயன்தாரா திருமணம் சட்டப்படி செல்லுமா? என்று ஐகோர்ட்டு வக்கீல் விஜயதரணி கூறியதாவது:-
பிரபுதேவாவுக்கு மனைவி ரம்லத் இருக்கிறார். இரு குழந்தைகளும் உள்ள ர். எனவே நயன்தாராவை மணப்பது சட்டப்படி குற்றமாகவே கருதப்படும்.
ரம்லத் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. எனவே அது செல்லாது என பிரபுதேவா கருதலாம். இந்து சட்டப்படி நாலைந்து பேரை வைத்துக் கொண்டு தாலி கட்டினாலே அது செல்லத்தக்கதுதான். பிரபு தேவா-ரம்லத் திருமணத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தியதை அக்கம் பக்கத்து வீட்டார் பார்த்து இருக்கிறார்கள். பிரபுதேவா பாஸ்போர்ட்டில் மனைவி ரம்லத் என்ற லதா என உள்ளது. இரு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் பிறப்பு சான்றிதழிலும் தந்தை பிரபுதேவா என்று இருக்கிறது.
ரம்லத் தனது பெயரை லதா என மாற்றி இந்துவாக மாறியது கெஜட்டில் பதிவாகி உள்ளது. அதில் கணவர் பிரபுதேவா என இருக்கிறது. ரேசன்கார்டிலும் பெயர்கள் உள்ளன.
இவையெல்லாம் பிரபு தேவா-ரம்லத் கணவன்- மனைவி உறவை ஊர் ஜிதப்படுத்தும் ஆதாரங்கள் எனவே பிரபுதேவா- நயன்தாரா திருமணம் நடந்தால் இருவருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி.
சமீபத்தில் இந்தியாவில் முதல் மனைவி இருந்தும் அமெரிக்காவில் இன்னொரு பெண்ணை மணந்து ஒருவர் குடித்தனம் நடத்தினார். இந்த விஷயம் தெரிந்ததும் முதல் மனைவி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் இரண்டாவது மனைவி அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய போது விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். அதன்படி பார்த்தால் நயன் தாராவுக்கும் தண்டனை கிடைக்கும். பிரபுதேவாவுக்கு 5 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
இப்போது எனது கேள்வி என்னவென்றால், ஒரு பெண் கணவனாலோ, அல்லது கணவன் வீட்டுகாரர்களாலோ, அல்லது தனது பெற்றோர்களாலோ, மற்றவர்களாலோ பாதிக்கப்பட்டும் போது நியாயம் அந்த பெண்ணுக்கு மறுக்கப்படும் போது யாரை நாடுவார்கள் ? யாரை நாடுவது வழக்கம் முதல்வரை தான் நாடுவார்கள்.(நீதிமன்றம் செல்வார்கள் தான் ஆனால், தீர்ப்பு வருவதற்கு முன் என்னவெல்லாமோ நடந்து முடிந்து விடும் சம்பந்தப்பட்டவர்களும் வயதாகி விடுவார்கள்). முதல்வரிடம் தான் முறையிடுவார்கள். ' என்னை எனது கணவரோடு சேர்த்து வையுங்கள் என்று முறையிடுவது தான் வழக்கம் ஆனால், நயன்தாரா, பிரபுதீவாவின் காதலால் பாதிக்கப்பட்டு பிரபுதேவாவின் மனைவி ரமலத் தனக்காக குரல் கொடுக்க ஆள் இல்லாமல் தனியாகவே இவர்களிடம் போராடும் இந்த வேளையில் நமது தமிழக முதல்வர் அவர்கள் இந்த காதல் ஜோடியை ஒன்றாக மேடையில் ஆட வைத்து இவர்களின் காதல் லீலைகளை பார்த்து ரசிக்கிறார். மறைமுகமாக சுத்திக்கொண்டு இருந்த இந்த கள்ள காதல் ஜோடி ஒரு முதல்வரின் முன்னால் கூத்தடிக்கிறது.(தொடப்பகட்டையால் அடிப்போம் என்று சொன்ன மகளிர் அமைப்புகளை காணோம்). பாவம் ஏழை பொண்ணுக்கு நியாம் வழங்க வேண்டிய இடத்தில் இருக்கும் முதல்வர் இவர்களின் கூத்தை பார்த்து ரசிக்கிறார் என்றால் பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும் முதல்வர் இவர்களின் காதலை அங்கீகரிப்பதாக தானே தோன்றும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் மேடைக்கு வரும் போது நயன்தாரா ஒரு கையை முட்டிவரை தூக்கி என்னொரு கையால் வெட்டி விடுவேன், முதல்வர் எங்கள் பக்கம் இருக்கிறார் என்று மிரட்டல் விடுவது போல் காட்டுகிறார்.
இதெல்லாம் பார்த்தால் யாரு தான் பாவம் பிரபுதேவாவின் மனைவி ராமலத்துக்காக குரல் கொடுப்பார்கள். வீடியோ இணைத்துள்ளேன் பாருங்கள் கூத்தை.
பிரபுதேவா நயன்தார காதல் லீலைகளின் போட்டோக்கள்
இது மட்டுமல்ல முதல்வரின் கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'மானாட மயிலாட'என்ற நடன நிகழ்ச்சிக்கும் பிரபுதேவா, நயன்தாரா ஜோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து சிறப்பித்துள்ளார்கள்
இறுதியாக ஒன்று சொல்லிகொள்கிறேன், 'ஒரு பொண்ணோட புருஷனை அபகரித்து ஒரு குடும்பத்தையே கண்ணீர் சிந்த வைத்தால் நாளை நயன்தாராக்கும் இந்த நிலைமை தான் வரும் நாளை இதே பிரபுதேவா நயன்தாராவை விட்டுவிட்டு வேறு ஒரு நடிகையை தேடி போகும் காலம் விரைவில் வந்தே தீரும் . இதற்கு எடுத்துக்காட்டுக்கள் நிறைய இருந்தாலும் எல்லோர்க்கும் தெரிந்த ஒரு எடுத்துக்காட்டு வாணி க்கு துரோகம் செய்து கமலை வாணியிடம் இருந்து பிரித்து சென்று வாணியின் கண்ணீருக்கு ஆளான சரிகாவின் நிலைமை என்ன ஆனது என்று சிந்தித்து பாருங்கள் .
விழியே பேசு வாசகர்களின் சார்பாக ஒரு வேண்டுகோள் : உக்கார்ந்தால், நின்றால் போராட்டம் நடத்தும் மகளிர் அமைப்புகள் இந்த ஒன்றிலாவது பாவமான பிரபுதேவா மனைவி ராமலத்துகாக போராட முன் வாருங்கள். நயன்தாராவுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுங்கள்.
'எந்த அரக்கத்தனமான வைரஸாக இருந்தாலும் அவற்றுக்கு தண்ணி காட்டி நமது கணினியை என்றும் வைரஸ் இன்றி புதிதாக வைத்திருக்க' - நாளை எனது 100௦௦-வது பதிவாக வெளிவருகிறது
No comments:
Post a Comment