'விழியே பேசு' வலைத்தளத்தின் வாசகர்களுக்கு எனது நன்றிகள் .... நமது விழியே பேசு இணையத்தளம் ஆரம்பித்து ஒரு மாதம் கூட நிறைவடைவதற்குள் 100-வது பதிவை போடும் அளவுக்கு எனக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்து கொண்டு இருக்கும் வாசகர்களுக்கு நன்றிகள் . இந்த நேரத்தில் உங்களோடு எனது இன்னொரு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள விருப்பப்படுகிறேன். நான் இந்த இணையத்தளம் ஆரம்பித்த போது Alexa Traffic Rank பட்டியலில் 57,15,026 இல் இருந்தது நமது வலைத்தளம். ஆனால், இன்று ஒரு மாதம் கூட ஆகுவதற்குள் நமது வலைத்தளம் 8,33,155-க்கு முன்னேறியுள்ளது. என்னை பொறுத்த மட்டில் இது ஒரு பெரிய முன்னேற்றமாக தான் எண்ண தோன்றுகிறது. உங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுகொள்வதொடு, எமது வாசகர்களுக்கு மீண்டும் நமது விழியே பேசு வலைத்தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சரி சரி இன்னும் நாம் நமது விஷயத்துக்கு வருவோம். நான் இதுவரைக்கும் பல பயனுள்ள இணையத்தளங்களை பற்றி சொல்லி வந்தேன் ஆனால், எனது 100-வது பதிவில் முதல் முறையாக ஒரு மிகவும் பயனுள்ள, ஆச்சரியமூட்டும் மென்பொருளை பற்றி சொல்ல போகிறேன் பொதுவாக கணினி என்றால் உடனே நமது நினைவுக்கு வருவது வைரஸ் தான் வைரஸ் இல்லாமல் கணினி இல்லை கணினி இல்லாமல் வைரஸ் இல்லை என்னும் அளவுக்கு இருவரும் இணைப்பிரியாதவர்கள். நாமும் இவர்கள் இருவரையும் பிரிப்பதற்காக எவ்வளவோ பண்ணிட்டோம் ஆனாலும் முழுபலன் கிடைப்பது இல்லை என்பது தான் உண்மை.
நாம் நமது கணினியை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் , நமது கணினியை வைரஸ் தாக்கி விட்டால் அதனை நீக்கவும் பல்வேறு விதமான வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை இதுவரையில் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால், வைரஸ் எதிர்ப்பு மென்பொருளின் தேவையில்லாமலே நாம் நமது கணினியை எந்த வித வைரஸ் தாக்குதலுமின்றி நாம் Fomat பண்ணிய போது எப்படி சுத்தமாகவும் வேகமாகவும் இருந்ததோ அதை போன்ற வேகத்துடனும் சுத்தமாகவும் வைத்திருக்க முடியும் என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது. அனால் அது தான் உண்மை. நாம் நமது கணினிக்குள் வைரஸ் புகுந்து விட்டது என்று தெரிந்து கொண்டதும் நாம் நமது கணினியை Restart பண்ணினால் போதும் கணினி பழைய நிலைமைக்கு(Format பண்ணிய போது இருந்த நிலைமைக்கு) வந்து விடும்.
இதற்கென்று ஒரு மென்பொருள் இருக்கிறது. அந்த மென்பொருளை இங்கே சென்று டவுன்லோடு செய்து கொள்ளவும். அதன் பிறகு உங்கள் கணினியில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று பார்த்து கொள்ள வேண்டும் . நீங்கள் உங்கள் கணினியை Format செய்து விட்டு உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் உங்கள் கணினியில் போட்டு விட்டு இறுதியாக இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவது தான் மிகவும் நல்லது. அதை பிறகு இன்ஸ்டால் செய்து உங்கள் கணினியில் நிறுவுங்கள். இப்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, அப்படி இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவும் போது நாம் நமது கணினியை C, D, E என பாகங்களாக பிரித்து வைத்திருப்போம் நமது வசதிக்காக. ஆனால், பொதுவாக நாம் நமது கணினியில் நிறுவும் மென்பொருட்கள் அனைத்தும் C Drive-இல் தான் இருக்கும். அதனால், நாம் இந்த மென்பொருளில் C Drive வை மட்டும் தேர்ந்து எடுத்து இந்த மென்பொருளில் அளிக்க வேண்டும் . இப்போது நாம் நமது கணினிக்குள் வைரஸ் புகுந்து விட்டது என்று தெரிந்து கொண்டதும் நாம் நமது கணினியை Restart பண்ணினால் போதும் நமது கணினி பழைய நிலைமைக்கு(Format பண்ணிய போது இருந்த நிலைமைக்கு) வந்து விடும். ஆனால், நாம் C Drive-இல் ஏதாவது File சேமித்து வைத்திருந்தால் அவையும் அழிந்துவிடும் எனவே, இந்த மென்பொருளை நாம் நமது கணினியில் நிறுவினால் நமக்கு தேவையான எந்த முக்கியமான பையில்களையும் C Drive-இல் சேமித்து வைக்க கூடாது. மீண்டும் சொல்கிறேன் அப்படி C Drive-இல் சேமித்து வைத்தால் அந்த பையில்கள் அழிந்துவிடும். ஏனென்றால், நமது Restart பண்ணியதும் கணினி நாம் இந்த மென்பொருளை நமது கணினியில் நிறுவும் போது நமது கணினியில் C Drive-இல் என்ன என்ன இருந்ததோ அதை தவிர எதுவுமே நமது கணினியில் இருக்காது. வைரஸ் உட்பட . அதனால் நமது கணினியை வைரஸ் தாக்கினாலும் Restart பண்ணி விட்டால் போது நமது கணினியை விட்டு வைரஸ் ஓட்டம் பிடிக்கும் . கொஞ்சம் கவனமாக C Drive-இல் முக்கியமான பையில்களை சேமித்து வைக்காமல் இருக்க வேண்டும் அவ்வளவு தான்.
'எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோம்மா என்ன.?’ நண்பர்களே! இன்னும் வைரஸ் பற்றிய கவலை இன்றி வைரசுக்கு தண்ணி காட்டலாமா எனன...?
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
very useful...
ReplyDeletethanks jr
ReplyDelete