அண்மையில் ,நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்செங்கோடு அருகே நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சி தொண்டரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் கொடிப்பயணம் மேற்கொண்டர். இந்த பயணத்தின் பொழுது நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதன் ஒருபகுதியாக சம்பவத்தன்று மாலை திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.அப்பொழுது அருகே நின்று கொண்டிருந்த கட்சித் தொண்டர் ஒருவர் வைகோ மீது பூக்களை வீசினார் இதனால் ஆவேசமடைந்த வைகோ திடீரென பூக்களை வீசிய கட்சித் தொண்டரை தாக்கினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.உடன் சுதாரித்துக் கொண்ட வைகோ சிரித்துக் கொண்டே நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்தின் போது தன்னோடு வந்தவரை விஜயகாந்த் தாக்கியதையும் மாறந்திருக்க மாடீங்கன்னு நினைக்கிறன். அன்று விஜயகாந்த் இன்று வைகோ நாளைக்கு யாரு அடிக்க போறாங்களோ ....? தொண்டன் என்றாலே அடிவாங்கிறவனா..? இதுவரைக்கும் எதிர்கட்சி காரங்ககிட்ட இருந்து தான் வாங்கினான் இப்போ எல்லாம் தன்னோட தலைவங்க கிட்ட இருந்தே வாங்க தொடங்கிட்டாங்க ஆனாலும் புத்தி வரமாட்டேங்குதே என்ன பண்ணுறது நல்லா படட்டும் அப்போதாவது புத்தி வருதா என்று பார்போம் தன்னை துப்பாக்கியால் சுட்ட கொலைகாரனையே மன்னித்து விட்டு இறந்த காந்தியடிகள் தலைவரா இவங்க எல்லாம் தலைவருங்களா?
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ..
முகத்துதி பாடச்சொல்லி, கேட்டு மகிழும் தலைவர்கள் உள்ள நாட்டில், தலைக்குப் பூ போடும், முட்டாள் தொண்டனை தட்டி விடுதல் குற்றமா? வேடம் போட வைக்கோ இன்னும் கற்கவில்லீங்கோ!
ReplyDeleteமுகத்துதி பாடச்சொல்லி, கேட்டு மகிழும் தலைவர்கள் உள்ள நாட்டில், தலைக்குப் பூ போடும், முட்டாள் தொண்டனை தட்டி விடுதல் குற்றமா? வேடம் போட வைக்கோ இன்னும் கற்கவில்லீங்கோ!
ReplyDelete