மனிதனின் ஆயுளை 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் மருந்தை அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வருகிறது.
நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஏராளமான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. முதுமையை தடுத்து மனிதனின் ஆயுளை நீட்டிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர். முதுமையை கட்டுப்படுத்தும் சிர்டுயின் என்ற ஜீனை தூண்டும் எதிர்ப்பு சக்தி மருந்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் நோய்கள் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியர் டேவிட் சின்கிளேர் கூறியிருப்பதாவது:
சிர்டுயின் ஜீனை தூண்டும் மாத்திரை ஒன்று சாப்பிட்டால், வயதானாலும் நினைவாற்றல் குறையாது. உடல் உறுப்புகள் தளராது. அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிட்டாலும் எந்தவித பிரச்னையும் ஏற்படாது. மாரடைப்பு, கண்கோளாறு வரவே வராது. மூட்டு வலி மாயமாகும். விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இந்த புதிய எதிர்ப்பு சக்தி மருந்து சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. எந்த பக்கவிளைவுகளையும் இது ஏற்படுத்தவில்லை. ஆனால் ஆயுளை மேலும், மேலும் நீட்டிக்க இதை தொடர்ந்து சாப்பிட்டால் சில பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றார்.

ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விற்பனைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த புதிய மருந்து மூலம் மனிதனின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 100 வயதை கடந்து வாழும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களை இனி நாம் அதிகம் பார்க்கலாம்.
எல்லாம் சரி அப்போ இந்த மருத்துவர்கள், மருத்துவமனை எல்லாம் என்ன பண்ணுறது . அவங்க பொழப்பு ரொம்ப கஷ்டமா போகுமே ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment