நடிகர் விஜயகுமார் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தால், அவரை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என்று அவரது மகளும் நடிகையுமான வனிதா ஆவேசமாக கூறினார். டிவி நடிகர் ஆகாஷை விவாகரத்து செய்த பிறகு ஆனந்தராஜன் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்தார். வனிதாவின் மகன் ஸ்ரீஹரி (9), தாத்தா விஜயகுமாரிடம் இருந்தான். மகனை மீட்டுத் தருமாறு கடந்த 8ம் தேதி மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார் வனிதா. இதையடுத்து ஸ்ரீஹரியை வனிதாவுடன் விஜயகுமார் அனுப்பி வைத்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி விஜயகுமார் அளித்த புகாரில், வனிதாவும் அவரது கணவரும் தன்னை அடித்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை ஆனந்தராஜனை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று டிஜிபி லத்திகா சரணிடம் வனிதா புகார் கொடுக்க வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது தந்தை, அதிகாரத்தை பயன்படுத்தி என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். என் குழந்தை எனக்கு வேண்டும் என்று கேட்க தீபாவளியன்று சென்றேன். அப்போது, என் அண்ணன் அருண் விஜய் என்னை எட்டி உதைத்தார். என்ன காரணத்திற்காக அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என புரியவில்லை. அருண் விஜய்யை காப்பாற்றுவதற்காக எனது கணவரை ஜெயிலில் தள்ளியுள்ளார். என் கணவருடன் சேர்ந்து நடத்தும் நிறுவனம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இது பிடிக்காமல் எனது அண்ணன் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி இருவரும் பிரச்னை செய்கிறார்கள். அவர்கள்தான் இதற்கு காரணம். நேற்றிரவு கூட அடியாட்கள் என் வீட்டுக்கு வந்து என்னை தாக்க முயன்றனர். எனது ஒன்றரை வயது குழந்தை ஜெய்நிதாவின் கழுத்தை நெரித்து, கொன்று விடுவோம் என்றும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்றும் மிரட்டினர். எனக்கோ, எனது குழந்தைகளுக்கோ தொல்லைகள் தொடர்ந்து கொடுத்து வந்தால் விஜயகுமார் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன்.
இவ்வாறு வனிதா ஆவேசமாக கூறினார். குடும்பத்துடன் கைது: வனிதா கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா, மகன் அருண் விஜய் ஆகியோரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். பின்னர் உடனடி ஜாமீனில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

வாசகர்களே! நிறைய அதிர்ச்சியான அசிங்கமான விஷயங்கள் வெளிவர போகுது என்று யாரும் எதிர்பார்க்காதீங்க அப்புறம் நீங்க தான் ஏமாந்து போவீங்க. அப்படி எதுவும் வெளிவராது ஏன்னா.....?
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment