மனித மனங்கள் வக்கிர எண்ணங்களும் , அழுக்குகளும் நிறைந்தது. இதற்கு அண்மை காலமாக தமிழ்நாட்டில் நடந்துவரும் சிறுவர்கள் கடத்தல் சாட்ச்சி. ஆனால் இதற்கெல்லாம் மேலாக இருக்கிறது அமெரிக்காவில் நடந்துள்ள சம்பவம் .
தாயை போல் ஒரு தெய்வம் இல்லை, தாயே நாம் கண்ணால் பார்த்த தெய்வம் , தாய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்றெல்லாம் நாம் தாயின் பெருமைகளை போற்றி புகழும் வேலையில் அமெரிக்காவில் ஒரு தாய் செய்த செயல் உலகில் தாய்மைக்கே இழுக்காக அமைந்துள்ளது
அமெரிக்காவின் ஒக்லஹாமா பகுதியைச் சேர்ந்த பெண் லிண்ட்சே பிட்லர். இவருக்கு 2 மகன்களும், பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது. இவருக்கு போதைப் பழக்கம் இருந்துள்ளது. ஏதோ வெறுப்பின் காரணமாக தனது பச்சிளம் குழந்தையை கொல்ல முடிவு செய்தார். கணவர் வேலைக்கு சென்றதும், வாஷிங் மெஷினில் துணிகளுடன் தனது பெண் குழந்தையையும் உள்ளே போட்டு சுவிட்ச்சை ஆன் செய்தார். சுமார் 40 நிமிடம் வாஷிங் மெஷின் இயங்கியுள்ளது.
அப்போது பிட்லரை பார்க்க உறவுக்கார பெண் ஒருவர் வீட்டுக்கு வந்தார். பிட்லருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வாஷிங் மெஷினில் வித்தியாசமான சத்தம் கேட்டது. உடனே மூடியை திறந்து பார்த்தார். துணிகளுடன் சுற்றிய நிலையில் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குழந்தையை கொன்ற தாய் மீது போதை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்தனர் போலீசார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் பெஞ்சமின் ட்ராமல் கூறுகையில், என் மனைவி குழந்தையை கொன்றதை நம்பவே முடியவில்லை என்று கூறி கதறி அழுதார்.
போதை மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது . புனிதமாக போற்றப்படும் தாய்மையும் அசிங்கமாக்குகிறது இது போன்றவர்களின் செயல்
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment