இணையத்தளத்தை பயன்படுத்துவோர்க்கு இருக்கும் பல பிரச்சனைகளில் ஒரண்டு பாஸ்வேர்டுகளை பாதுகாப்பதும் தான். சில பேர் ஒவ்வொரு அக்கவுண்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்டு வைத்திருப்பார்கள் இதனால் சிலசமயங்களில் பாஸ்வேர்டு மறந்து பொய் அவஸ்த்தை படுவதும் உண்டு என்பது வேறு கதை. அனைத்து அக்கவுண்டுக்கும் ஒரே பாஸ்வேர்டு வைத்திப்பவர்களுக்கு எங்க, நம்முடைய பாஸ்வேர்டு யாருக்காவது தெரிஞ்சிட்டா நம்மோட எல்லா விதமான அக்கவுண்டிலும் நுழைந்து விடுவார்களோ என்ற பயம் இருக்கும்.இப்படிப்பட்டவர்களின் சிக்கலை தீர்ப்பது தான் இந்த இணையத்தளத்தின் முக்கியத்துவம்.
இதற்கு http://clipperz.com/ என்ற இந்த இணையத்தளம் உங்களுக்கு உதவுகிறது. இணையத்தளத்தை அடிப்படையாக கொண்ட 'பாஸ்வேர்டு மேலாளர்', 'கிளிப்பர்ஸ்', இதன் மூலம், ஜிமெயில், அமேஸான், ஈபே போன்ற உங்களின் எந்த ஆன்லைன் அக்கவுண்டையும் ஒரே 'க்ளிக்' மூலம் 'லாக்கின்' செய்யலாம். பாதுகாப்பானது, ரகசியமானது. உங்களின் பிரவுசருடன் இணைத்துக்கொள்ளக் கூடியது. என்பதெல்லாம் ' 'கிளிப்பர்ஸ்''-ன் சிறப்பம்சங்கள்.
'கிளிப்பர்ஸ் டேட்டா'வின் ஒரு 'ஆப்லைன் காப்பி'யை 'யுஸ்பி ஸ்டிக்'கில் செலுத்தி, எங்கிருதும்' ஆக்சஸ்' செய்யலாம். ஒரு 'கிளிப்பர்ஸ்' அக்கவுன்டைத் தொடங்குவதற்கு தனிப்பட்ட விவரங்களோ, இ-மெயிலோ தேவையில்லை. மேலும் விரைவான ஆக்சஸ் பெற 'கிளிப்பர்ஸ் பாஸ்வேர்டு மானேஜர்'-ஐ 'பயர்பாக்ஸ்' சைடு பாரில் பொருத்திக்கொள்ளலாம்.
இப்படி பல வசதிகளை வழங்குகிறது இந்த இணையத்தளம்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment