பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பீகார் சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
243 தொகுதிகளையுடைய பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் மாதம் 21ம் தேதி தொடங்கி கடந்த 20 ம் தேதி வரை 6 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. மொத்தம் 52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 141 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ., 102 தொகுதிகளிலும் போட்டியிட்டன. எதிர்க்கட்சிகள் தரப்பில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 168 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சி 75 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தனியாக களம் இறங்கியது.

இந்த தேர்தலில் 3,523 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 308 பேர் பெண்கள். பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி, ரகோபூர், சோன்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார்.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்று முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் மின்ணணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் முற்பகல் 11 மணிக்குள் தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சனை ஏற்படாமல் இருக்க துணை இராணுவப்படை வீரர்கள் பீகார் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மாநிலம் முழுவதும் 42 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியயை பிடிக்கும் என்று தெரிகிறது.
நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 101 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க வேட்பாளர்கள் 97 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.
அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க வேட்பாளர்கள் 97 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் தலைமையிலான கூட்டணி 31 இடங்களில் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ராஷ்டிரியஜனதாதளம் 21 இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திகட்சி வேட்பாளர்கள் 10 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.
243 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 6 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளனர். சுயேட்சை மற்றும் இதரகட்சி வேட்பாளர்கள் 8 (வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் உடனுக்குடன் மாற்றப்படும் நமது வலைத்தளத்தில் என்பதை தெரிவித்துகொள்கிறேன் )
243 தொகுதிகளில் 122 இடங்களை கைப்பற்றும் கட்சிதான் தனித்து ஆட்சி அமைக்க முடியும். முதல்கட்ட நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால் நிதிஷ்குமார் பாஜ.க.வுடன் இணைந்து பீகார் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
நல்ல பதிவு , வாழ்த்துக்கள்
ReplyDelete