நாம் பல சாட்டிங் பக்கவுண்டுகளை வைத்துக்கொண்டு எதில் எந்த நண்பன் இருப்பான் என்று பார்ப்பதற்காக ஒவ்வொரு அக்கவுண்டாக நுழைந்து தான் பார்த்து கொண்டு இருப்போம் . இன்னும் அதற்கெல்லாம் தேவையே இல்லை. 16 - க்கும் அதிகமான சாட்டிங் அக்கவுண்டுகளை ஒன்றாக இணைத்து சாட்டிங் செய்யும் வசதி வந்து விட்டது . உங்களின் அனைத்து விதமான சாட்டிங் அக்கவுண்டுகளையும் ஒரே இடத்தில் பயன்படுத்தலாம்.
இந்த வசதியை உங்களுக்கு http://www.pidgin.im/ என்ற இந்த இணையத்தளம் வழங்குகிறது. மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் செயல்படும் சாட்டிங் ஒருங்கிணைப்பு வசதியை இந்த இணையத்தளம் உங்களுக்கு வழங்குகிறது இந்த இணையத்தளம் வழங்கும் இலவச மென்பொருளை டவுன்லோடு செய்து அதனை உங்கள் கணினியில் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கூகுள் டாக், யாஹூ, எம்.எஸ்.என்,எய்ம், ஏ.ஒ.எல், உட்பட 16- க்கும் அதிகமான சாட்டிங் அக்கவுண்டுகளை ஒரே விண்டோவில் பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் தனித்தனியாக சாட்டிங் அக்கவுண்டுகளை இயக்குவதை இதனால் தவிர்க்கலாம். அனைத்து சாட்டிங் அக்கவுண்டுகளுக்கும் வரும் மெசேஜ்களை பற்றி உடனடியாக நமது டெஸ்க்டாப்பில் எச்சரிக்கை அளிக்கும் வசதியும் இதன் மூலம் பெறலாம். பல சாட்டிங் அக்கவுண்டுகளை வைத்துக் கொண்டு தலையை பிய்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன் படுத்தி பாருங்கள்
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ....
நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு தகவல்... நன்றி...
ReplyDeletehttp://electronics.ebest.in/laptops-prices-in-india/chennai/laptops/1/2.html
ReplyDeleteThe laptops new models reviews......