இன்று கணினி பயன்படுத்துபவர்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்று யு.எஸ்.பி. போர்ட் இதன் மூலம் நமது கணினியில் உள்ள தகவல்களை பெற்று சேமித்து வைக்கவும் , வேறு கணினியில் உள்ள தகவல்களை கொண்டு வந்து நமது கணினியில் சேமிக்கவும் உதவும் சாதனங்களில் முக்கியமானது பென் டிரைவ் ஆகும். ஒரு கணினியில் உள்ள தககல்களை காப்பி செய்து வைத்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த உதவும் சாதனம் இது. எனினும் பல கணினிகளில் பயன்படுத்தப் படுவதால், பென் டிரைவ் மூலம் எளிதாக வைரஸ்கள் மற்றொரு கணினிக்கு பரவிவிடுகிறது. இதனாலேயே பலரும் பென் டிரைவை அனைத்து கணினியிலும் பயன் படுத்துவது இல்லை. தங்கள் கணினியோடு நிறுத்தி கொள்கின்றனர். ஆனால் இந்த பிரச்சினையை போக்கி சந்தேகத்துக்கு இடமான கணினிகளில் பயன்படுத்தும் போதும் பென் டிரைவை காப்பாற்றும் இலவச மென்பொருள் ஒன்று உள்ளது.
அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய
இங்கு செயன்று பதிவிறக்கம் செய்யலாம்.
இங்கு செயன்று பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்த பிறகு அதில் இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும், அதன் மூலம் யு.எஸ்.பி போர்ட் மூலம் இயக்கப்படும் சேமிப்பு உபகரணங்களில் எந்த பையிலும் நுழைந்து விடாதப்படி disable writing என்றவாறு மாற்றலாம். இதனால் கணினியில் இருந்து வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை பென் டிரைவில் நுழைய முடியாது.அதே சமயம் பென் டிரைவில் உள்ள தகவல்களை கணினிக்கு மாற்ற முடியும்.பென் டிரைவ் மட்ட்டுமின்றி யு.எஸ்.பி போர்ட் மூலம் உபயோகிக்கப்படும் அனைத்து சேமிப்பு உபகரணங்களையும் இதே போன்று பாதுக்காக்கலாம். கணினியில் இருந்து பாதுக்காப்பாக இருக்கும் பையில்களை காப்பி செய்ய விரும்பினால், unable writing என்ற வசதியின் மூலம் காப்பி செய்து கொள்ளலாம்.
என்ன இன்னும் பென் டிரைவில் வைரஸ் புகுந்து விடுமோ , அதன் மூலம் நமது கணினியிலும் வைரஸ் நுழைந்து விடுமோ என்று கவலை பட தேவை இல்லை தானே ?
vadai enakke...
ReplyDelete