இன்று சாட்டிங் வசதியை பல இணையத்தளங்கள் அளிக்கின்றன. ஆனால் நாம் மற்ற நண்பர்களுடன் சாட்டிங்கில் ஈடுப்பட்டப்போது பகிர்ந்து கொண்ட தகவல்களை பெருபாலானா சாட்டிங் தளங்கள் சேமித்து வழங்குவது இல்லை, சாட்டிங் தகவல்களை சேமித்து வைத்து தேவையானபோது பார்ப்பதற்கான வசதியை ஒரு இணையத்தளம் வழங்குகிறது.
அதற்கு நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு சென்று இந்த இணையத்தளம் வழங்கும் இலவச மென்பொருளை டவுன்லோடு செய்ய வேண்டும். டவுன்லோடு முடிந்த உடன் அதில் நாம் சேமிக்க விரும்பும் சாட்டிங் தளங்களின் அக்கவுண்ட் சம்பந்தமான இ மெயில் முகவரி பாஸ்வேர்டு போன்ற தகவலை அளிக்க வேண்டும்.
உடனே நமது இமெயில் முகவரிக்கு சரிப்பார்க்கும் இ மெயில் ஒன்றை அனுப்புவார்கள். அதை 'கிளிக்' செய்தால் நமது கணக்கை ஆக்டிவேட் செய்து விடுவார்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட சாட்டின் முகவரியில் நாம் செய்யும் சாட்டிங் எல்லாம், சேமிக்கப்பட்டு விடும். தேவைப்படும்போது நமக்கு தேவையான தகவல்களை அதில் தேடி பெறலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சாட்டிங் அக்கவுண்டுகளின் தகவல் பரிமாற்றத்தையும் சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment