'குருதிபுனல்' உலக நாயகன் கமல் மற்றும் அர்ஜூன் , நாசர் ஆகியோரின் எதார்த்தமான நடிப்பில் வெளிவந்து அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படம் . இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் மறைந்த பி.சி.ஸ்ரீராம் இயக்கி இருந்தார் . ஆங்கில படங்களை போன்று திரைக்கதை அமைத்து இருந்தார் கமலஹாசான்.
இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் மகேஷ், உலக நாயகன், பி.சி.ஸ்ரீராம் ஆகியோரின் கவனக்குறைவால் ஒரு தவறு நடந்து இருக்கிறது
ஆம், கமல் நாசரை 'என்கவுண்டரில்' போட்டு தள்ளுவதற்காக ஒரு ஒதுக்கு புறமான இடத்துக்கு அழைத்து வருவார். அப்போது நாசரின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்ததும் நாசர் கமலை பார்த்து " நீ என்னை கொன்னுட்டா உன் மிடில் கிளாஸ் மனசாட்சி உன்னை உறுத்தி உறுத்தி கொன்னுடும். நீ என்னை கொல்லுரதுகாக நீ நம்புற நேர்மைய நீ மதிக்கிற காகிச்சட்டைய கறைப்படுத்த தயார்ன்னா அதுவும் எனக்கு வெற்றி தான் ..." இப்படி பேசுவார் உடனே கமல் துப்பாக்கியை நாசர் நெற்றிப்பொட்டில் இருந்து எடுத்து விட்டு சற்று தள்ளி சென்று கல்லுகள் உக்காந்து ஒரு சின்ன கல்லை எடுப்பார் அப்போது கல்லை எடுக்கும் போது பின்னணி இசை கொடுத்து இருப்பார்கள் கல்லுகளின் குவியலில் இருந்து ஒரு கல்லை எடுத்தால் எப்படி சத்தம் வருமோ அப்படி பின்னணி இசை கொடுத்து இருப்பார்கள். அப்புறம் கமல் அந்த இடத்திலேயே உக்காந்து இருந்து நாசரிடம் " பத்ரி இந்த விளையாட்டுல தோக்குறதோ ஜெய்கிறதோ முக்கியமில்லை உயிரோட இருக்குறதும் சாகுறதும் தான்" என்று சொல்லி முன்னாடி எடுத்த கல்லை கோபமாக அதே இடத்தில் வீசுவார் ஆனா ஒரு சின்ன சத்தம் கூட வராது அந்த இடத்தில் பின்னணி இசை கொடுக்க மறந்த்தது ஏனோ ...தெரிய வில்லை . வீடியோ இணைத்துள்ளேன் பாருங்கள்.
இவர்கள் அதிகமும் கவக்குறைவாக இருப்பது டப்பிங் நடக்கும் போதும் பின்னணி இசை சேர்க்கும் போதும் தான் என்று நினைக்கிறன் . தவறுகள் யார் செய்தாலும் தவறு தான் .
.
விரைவில் ...
'எந்த அரக்கத்தனமான வைரஸாக இருந்தாலும் அவற்றுக்கு தண்ணி காட்டி நமது கணினியை என்றும் வைரஸ் இன்றி புதிதாக வைத்திருக்க' - நாளை எனது 100௦௦-வது பதிவாக வெளிவருகிறது
''பிரபல ஒளிப்பதிவாளர் மறைந்த பி.சி.ஸ்ரீராம் இயக்கி இருந்தார்...''
ReplyDeleteபி.சி.ஸ்ரீராம் innum marayale, uyirodu than irukurar.
hello sir,,,
ReplyDeletekuruthi punal music composed by mahesh...
not isai gnani...
verify ur details and post,,,
dont give vague details...