நாகபுரியில் சனிக்கிழமை தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது..
ஆமதாபாத், ஹைதராபாத் டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் நாகபுரியில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது. இதையடுத்து ஆட்டம் 3 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மெக்கின்டோஷ், குப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர்.
ஆனால் அணியின் ஸ்கோர் 11 ரன்களை எட்டியபோது குப்தில், ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரைத் தொடர்ந்து மெக்கின்டோஷும் 4 ரன்களில் வீழ்ந்தார். அவரும் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
பின்னர் ராஸ் டெய்லர்-ரைடர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. ஸ்ரீசாந்த்-இஷாந்த் சர்மா கூட்டணி கட்டுக்கோப்பாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தது. அணியின் ஸ்கோர் 42 ரன்களை எட்டியபோது டெய்லர் 20 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த வில்லியம்சன் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஓஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் வெட்டோரி 3 ரன்களிலும், ஹாப்கின்ஸ் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து கடந்த ஆட்டத்தில் இரட்டை சதமடித்த மெக்கல்லம், ரைடருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ரைடர் 59 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டநேர இறுதியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. மெக்கல்லம் 34 ரன்களுடனும், சௌதி 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஓஜா, இஷாந்த், ஸ்ரீசாந்த் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ரன்குவிக்க நியூஸிலாந்து வீரர்கள் திணறினர். போதிய வெளிச்சமின்மை காரணமாக 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மேலும் 6 ரன்கள் எடுத்த நிலையில் 40 ரன்களில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு சௌ தியுடன் ஜோடி சேர்ந்த மெக்கே வந்த சிறிது நேரத்தில இஷாந்த் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதி விக்கெட்டுக்கு சௌ தியுடன் ஜோடி சேர்ந்தார் மார்டின் சௌ தி அதிரடியாக ஆட தொடங்கினார் அவர் இறுதியாக 38 ரன்கள் எடுத்த நிலையில் ஓஜா பந்துவீச்சில் சேவாகிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அவர் இந்த ரன்களை 68 பந்துகளை சந்தித்து எடுத்திருந்தார். மார்டின் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் .
இறுதியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 193/10 எடுத்தது .
இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா நான்கு விக்கெட்டுகளும், ஓஜா மூன்று விக்கெட்டுகளும், ஸ்ரீசாந்த் இரண்டு விக்கெட்டும், ஹர்பஜன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 6 ஓவர்களில் 31 ரன்களுடன் ஆடி வருகிறது. சேவாக் 19 ரன்களுடனும் காம்பீர் 10௦ ரன்களுடனும் களத்திலுள்ளனர்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
இப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்...
ReplyDeletewww.ellameytamil.com