1. அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
4. பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6. நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
7. நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை
அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
10. பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!
11. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!
12. அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!
13. அமைச்சர்கள் வீட்டு மின்சார பாக்கி பல லட்சம் ஏழை வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு மின்கட்டணம் 30 ரூபாய் கட்ட ஒரு நாள் தாமதமானதால்!
14. செல்வந்தர் வீட்டு நாய்க்கு தினமும் பிரியாணி,பிஸ்கட் ,பாலு, குளிக்க விலை உயர்ந்த சோப்பு ஆனால் ஏழை குழந்தை பசிச்சு அழுதா குடிக்க பால் இல்ல அம்மாவிடமும், ஏழைக்கு சாப்பாடு எச்சி இலை, குளிக்க 'ரின்' சோப் கூட இல்லை!
15. தலைவர் வருகைக்காக லட்சம் செலவில் பந்தல். ஏழையின் குடிசை மிதக்குது தண்ணீரில்!
16. தலைவர்கள் பாதுக்காப்புக்கு வருடம் பல கோடிகள். மானம் காக்க கோவணம் இல்லை ஏழைக்கு!
17. சாமிக்கும், நடிகர்களின் கட்டவுட்டுக்கும் குடம் குடமா பால் ஊத்துறான் சாமியும், கட்டவுட்டும் குடிக்காது என்று தெரிந்தும். பச்சை குழந்தை பசியில் அழுது துடிக்குது பாலுக்கு கொடுத்தால் குடிக்கும்பா அந்த பாலையும்!
18. ஓட்டுக்கு காசு கொடுக்குறான். குடிசை ஓட்டையை கண்டும் காணாமல்!
19. ஏழை தப்பு செய்தால் (செய்யாமலும் கூட) தூக்கு தண்டனையும் உண்டு. கொலை செய்த தலைவன் 'முதல்வர்' பதவியிலும் உண்டு!
20. பசிக்கு உணவு இல்லாமல் எலிக்கறி சாப்பாடு. தானிய கிடங்கில் தானியங்களை சாபிடுது எலிகள் தினம்!
21. பத்து வயதில் பலியவிவாகம், 50 வயதிலும் முதிர்கன்னி!
22. கோவில் உண்டியலில் கோடி ரூபாய் காணிக்கை. ஏழை மனிதன் 'மலம்' அள்ளுகிறான் 5 ரூபாய்க்கு!
23. மழை, புயலில் சிக்கி வீடு இன்றி தவிக்கும் மக்கள். விமானத்தில் பறந்தபடி பார்வை இடும் தலைவன்!
24. 'மது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது அல்ல', 'புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது' இப்படி அரசாங்க முத்திரை இவற்றில் உண்டு. ஆனால் அரசாங்கம் விற்குது மது , அரசாங்க அனுமதி உண்டு சிகரட், பீடிக்கு!
25. ஆடம்பர பங்களா, சொகுசு வாகனம், கார் கதவு திறக்கவும் வேலைக்கு ஆள். அணிய சட்டையின்றி, தெருவோர நாயோடு நாயாக, கொசுக்கடியில், சாக்கடை நாற்றத்தில் குளிரின் நடுக்கத்தில் கை குழந்தையோடு கண்ணீர் மழையில் படுத்துறங்கும் தாய்!
இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான் எழுப்பிக் கேட்க வேண்டுமா...?ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
குறிப்பு : இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா இப்படி போடலாமேன்னு நினச்சு இப்படி பண்ணிடு இதக்கு தகுந்த மாதிரி போட்டோ போடலாம்னு தேடினா ... பால் அபிஷேகம் என்று டைப் செய்து தேடினா உடனே இரண்டு போட்டோவும் கிடைத்தது. ஆனா ஏழ்மைய சித்தரிக்கிற மாதிரி ஒரு போட்டோ தேடினா நான் நினச்ச மாதிரி கிடைக்கல்லங்க அப்புறமா poor countries என்று டைப் செய்தால் ...... Afghanistan, Angola, Bangladesh, Benin, Bhutan, Burkina Faso, Burundi, Cambodia, Cape Verde, Central African Republic, Chad, Comoros, Democratic Republic of Congo, Djibouti, Equatorial Guinea, Eritrea, Ethiopia, Gambia, Guinea, Guinea-Bissau, Haiti, Kiribati, Laos, Lesotho, Liberia, Madagascar, Malawi, Maldives, Mali, Mauritania, Mozambique, Myanmar, Nepal, Niger, Rwanda, Samoa, São Tomé and Príncipe, Senegal, Sierra Leone, Solomon Islands, Somalia, Sudan, East Timor, Togo, Tuvalu, Uganda, Tanzania, Vanuatu, Yemen, Zambia. ஐ.நா-வால் ஏழை நாடுகள் என்று அறிவிக்கப்பட்டதாக இப்படி ஒரு லிஸ்டே கொடுத்தாங்க சரின்னு ஒவ்வொரு நாட எடுத்து போட்டோ தேடினா கிடைக்கவே இல்லைங்க கடைசியா சரி இந்தியானு போட்டு பார்ப்போமேன்னு போட்டா நான் அவங்க கொடுத்திருந்த ஏழை நாடுகளின் பட்டியலில் உள்ள நாட்டுகளை போட்டு தேடிய போது பார்க்காத பரிதாபமான போட்டோ எல்லாம் இந்தியான்னு போட்டு தேடியதில் பார்க்க கிடைத்தது. இதில் வேடிக்கையான விஷயம் ஐ.நா -வால் அறிவிக்கப்பட்ட ஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்பது தான்.
http://tamilmovies.ebest.in/tamil-movie-previews/latest-tamil-movie-previews/preview.html
ReplyDeleteLatest tamil movies........