Saturday, November 13, 2010
தண்ணீரில் நடந்த கோலாகல துவக்க விழா ஆசிய விளையாட்டுப்போட்டிகள்
ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் துவக்க விழாவுடன் ஆரம்பமானது. "பேர்ல்' நதியில் படகுகளின் அணிவகுப்பு, தண்ணீரில் நடன கலைஞர்களின் சாகசம், "லேசர் ÷ஷா' மற்றும் வாணவேடிக்கையுடன் நிகழ்ச்சிகள் களை கட்டின.
சீனாவில் உள்ள குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்று ஆரம்பமானது அதன் துவக்கவிழா கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்தன. வழக்கமாக மைதானங்களில் தான் துவக்க விழா நடக்கும். இம்முறை மிகவும் புதுமையாக "பேர்ல்' நதி கரையில், தண்ணீரின் மீது விழா நடந்தது. குவாங்சு நகரத்தை "தண்ணீர் நகரம்' என்று அழைக்கின்றனர். இதனை குறிக்கும் வகையில் துவக்க விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தண்ணீரை அடிப்படையாக கொண்டு அமைந்தன.
இதற்காக ஹெனிக்சியா தீவுப் பகுதியில் 30 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இங்குள்ள பிரம்மாண்ட "ஸ்கிரீனில்' பேர்ல் நதியின் பெருமை மற்றும் சீன பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டன. இந்த அரங்கத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் தண்ணீரை வெளியேற்றவும் முடியும்.
விழா துவக்கம்:
சீன தேசிய கீதம் இசைக்க, கண்கவர் வாணவேடிக்கையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. இரண்டு சிறுவர்கள் சீன கொடியை ராணுவ வீரர்களிடம் அளித்தனர். பின் ராணுவ அணிவகுப்புடன் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அந்தரத்தில் பிரம்மாண்ட இலை மீது அமர்ந்தபடி ஒரு சிறுவன் பறந்து வந்தான். இவன் தண்ணீரை கீழே ஊற்ற, கலைஞர்கள் ஆட, நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. பின் 100 பள்ளி மாணவர்கள் சேர்ந்து பூக்கள் மலர்வது போல் அணிவகுத்து அசத்தினர். கப்பல் ஒன்று புயலில் சிக்கி தவிப்பது போல மிகவும் தத்தரூபமாக காண்பிக்கப்பட்டது. சுமார் 1, 320 குங்பூ கலைஞர்கள் மிக உயரத்தில் பறந்தவாறு சாகசம் நிகழ்த்தினர். இளம் கலைஞர்களின் "டிரம்ஸ்' இசை காதுகளுக்கு விருந்தாக அமைந்தது. பிரபல "பியோனோ' இசை கலைஞர் லாங் மற்றும் நடிகை ஜாங் ஜியி இணைந்து கலக்கினர்.
சுமார் 2,400 கி.மீ., நீளம் கொண்ட "பேர்ல்' நதியில் அலங்கரிக்கப்பட்ட 46 படகுகளில், போட்டியில் பங்கேற்கும் இந்தியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் வந்தனர். வானுயர்ந்த கட்டடங்கள் மற்றும் 610 மீட்டர் உயரம் கொண்ட குவாங்சு "டிவி' கோபுரத்தின் பின்னணியில், நிகழ்ச்சிகள் அனைத்தும் அற்புதமாக இருந்தன.
ககன் தலைமை:
பின் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடந்தது. ஆப்கானிஸ்தான் முதலில் வந்தது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், மூவர்ணக் கொடி ஏந்தி வர, இந்திய குழுவினர் உற்சாகமாக வந்தனர். இதனை தொடர்ந்து போட்டிகளை முறைப்படி சீன பிரதமர் வென் ஜியாபோ துவக்க வைத்தார். ஆசிய விளையாட்டு ஜோதியை சீன டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் டெங் யா பிங் எடுத்து வந்தார். இதனை தொடர்ந்து ஜோதி ஏற்றப்பட, வாணவேடிக்கைகளுடன் துவக்க விழா இனிதே முடிந்தது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன்
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
படங்கள் அருமையாக உள்ளது.படங்களை போடும்போது கொஞ்சம் பெரிதாக போடுங்கள். ப்ளாக்கரில்தான் இப்போது அந்த சேவை உள்ளது.
ReplyDelete@THOPPITHOPPI
ReplyDeleteஆலோசனைக்கு நன்றி நண்பரே இப்போ சரி செய்துள்ளேன்.
All the event's will be stored .....
ReplyDeletehttp://tamilmovies.ebest.in/tamil-songs-lyrics/lyrics.html