எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய
'வெற்றி', 'நான் சிவப்பு மனிதன்',
'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய
மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1984ல்
'வெற்றி' படம் ரிலீஸ் ஆனது.
அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து
30 ஆண்டுகள் ஆகின்றன.
1992ல்
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில்
'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் விஜய் ஹீரோவாக
அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகும்
தொடர்ந்து அப்பா எஸ்.ஏ.
சந்திரசேகர் இயக்கிய படங்களிலேயே நடித்தார்.
1996ல்
விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த படம்
'பூவே உனக்காக'. இந்தப் படம் விஜய்யை
பட்டி தொட்டியெங்கும் நன்கு அடையாளப்படுத்தியது. அதனால்,
தொடர்ந்து காதல் படங்களிலேயே விஜய்
நடித்தார்.
'லவ் டுடே', 'காதலுக்கு மரியாதை',
'நினைத்தேன் வந்தாய்', 'துள்ளாத மனமும் துள்ளும்'
ஆகிய படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய
வெற்றிகளைக் குவித்தன.
'குஷி',
'பிரியமானவளே', 'ப்ரெண்ட்ஸ்', 'ஷாஹகான்', 'யூத்' என்று நடித்துக்கொண்டிருந்த
விஜய் திடீரென ஆக்ஷன்
பாதைக்கு மாறினார். 'பகவதி' , 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி' ஆகிய படங்கள் விஜய்க்கு
ஆக்ஷன் ஹீரோ அடையாளத்தைக்
கொடுத்தன.
'செந்தூரப்பாண்டி'
படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார்.
'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்யுடன் இணைந்து அஜித் நடித்தார்.
'நேருக்கு நேர்', 'ஃப்ரெண்ட்ஸ்' படங்களில்
விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். 'ஒன்ஸ்மோர்'
படத்தில் சிவாஜியும், விஜய்யும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல்
14, 2005ல் ரஜினி நடித்த 'சந்திரமுகி'
ரிலீஸ் ஆனது. அதே நாளில்
விஜய்யின் 'சச்சின்' படமும் ரிலீஸ் ஆனது.
'போக்கிரி',
'வேட்டைக்காரன்' என முழுக்க முழுக்க
கமர்ஷியல் பக்கம் கால் பதித்த
விஜய் 'காவலன்' படத்தில் அமைதியான
ஃபெர்பார்மராக நடித்து அப்ளாஸ் அள்ளினார்.
'நண்பன்',
'துப்பாக்கி', 'கத்தி' என படத்துக்குப்
படம் வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்திவருகிறார்.
ஒரு நடிகனாக விஜய் விருதுகளை
வென்றிருக்கிறார். அதே சமயம், சில சறுக்கல்களையும்
சந்தித்திருக்கிறார்.
தோல்விப்படங்களைக் கொடுத்திருக்கிறார். ஆனாலும், விஜய்யின் அசைக்க முடியாத தன்னம்பிக்கைதான்
ரசிகர்கள் இளையதளபதி என்று அன்போடு அழைக்கும்
அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும்
படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.விஜய்க்கு இது 58வது படம்.
விஜய்யின் இந்த வெற்றிப்பயணம் தொடரட்டும்.
No comments:
Post a Comment