சினிமா ஜோடிகளின் காதல் கொஞ்சம் முகம் சுழித்தாலும் காற்றில் கரைந்துவிடுவதாக இருக்கிறது. சிம்பு, பிரபுதேவா நயன்தாரா, ஹன்சிகா காதல் இந்த ரகத்தில் அமைந்தது. டேட்டிங், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருந்த ஜோடிகள் திடீரென்று வெட்டிக்கொண்டு விலகிவிட்டனர். சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்தது ராணா&திரிஷா ஜோடி. வெளிநாட்டுக்கு போன£லும் சரி, உள்ளூர் பார்ட்டிக்கு போனாலும் கைகோர்த்துக்கொண்டு ஊர் சுற்றியது இந்த ஜோடி. பக்கம் பக்கமாக இணைய தளத்தில் போட்டோ ஆல்பமாக வெளியானது.
திடீரென்று என்ன நடந்ததோ கீரியும் பாம்புமாக மாறிவிட்டனர். வேறு நடிகைகளுடன் ராணா சுற்றுவதாக புகார் கூறி அவரது காதலை கத்தரித்துவிட்டார் திரிஷா. அத்தோடு நிற்காமல் தயாரிப்பாளர் வருண் மணியனை தனது புதிய காதலனாக ஏற்றுக்கொண்டார். இவருடன் டேட்டிங், பார்ட்டி என்று திரிஷா ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கெஞ்சிப் பார்த்தார், கொஞ்சிப் பார்த்தார் ராணா. எதுவும் எடுபடவில்லை. காதல் தோல்வி வேதனையில் புழுங்கிக்கொண்டிருக்கிறாராம். ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபாலி‘ படத்தில் நடித்து வரும் இவர் ஏற்கனவே படப்பிடிப்பில் 2 முறை காயமுற்று சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தார்.
மீண்டும் ஒரு விபத்திற்கு ஆளாகி இருக்கிறார். தீயில் அவரது கைவிரல்கள் கருகிவிட்டன. 5 விரலில் 4 விரல்கள் கருகியதால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் அவரே தகவல் வெளியிட்டிருக்கிறார். ‘நான் தீக்காயம் அடைந்திருக்கிறேன். 5 விரல்களில் 4 விரல்கள் கருகிவிட்டன. எதற்காக இப்படி ஆனது என்று என்னிடம் கேட்காதீர்கள்... ப்ளீஸ்‘ என்று வேதனை ததும்பும் முகத்துடன் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். எல்லாம் காதல் படுத்தும்பாடு என்கிறது டோலிவுட் வட்டாரம்.
இன்றைய சூடான செய்திகள்....

No comments:
Post a Comment