ஏ.ஆர்.முருகதாஸ், பிரபு தேவா தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்து பாலிவுட்டை கலக்கி வருகின்றனர். இவர்களில் தற்போது பிரபுதேவாவுக்கு சறுக்கல் நேரம் தொடங்கிவிட்டதோ என சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து 4 படங்களை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தவருக்கு ‘ஆக்ஷன் ஜாக்சன்‘ தோல்வி படமாக அமைந்திருப்பதாக பாலிவுட் மீடியா சரமாரி தாக்குதல் தொடுத்திருக்கின்றன.
‘வான்டட் படம் சல்மான் கானை கைதூக்கிவிட்டது, ஆக்ஷன் ஜாக்சன் அஜய் தேவ்கனை பின்னுக்கு இழுத்துவிட்டது‘ என்று பிரபுபற்றி கமென்ட் அடிக்கிறார்கள். போதாக்குறைக்கு நம்மூர் நடிகர் கார்த்திக் குமார் ('யாரடி நீ மோகினி' படத்தில் நடித்தவர்) வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இருக்கிறார். ‘பிரபு தேவாவை இயக்குனராக அங்கு (பாலிவுட்டில்) அனுப்பி வைத்ததற்காக தென்னிந்தியா சார்பில் வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என சேற்றை வாரி இறைத்திருக்கிறார்.
பிரபுதேவா, சோனாக்ஷியின் ரசிகை என்று கூறிக்கொள்ளும் பிரபா சின்ஹா என்பவர் கூறும்போது,‘சோனாக்ஷி சின்ஹாவை நினைத்து நாங்கள் பெருமைபட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் எந்த வகையான படத்தை அவர் தேர்வு செய்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விரசமான காட்சி, அபத்தமான வசனங்களில் அவர் நடித்திருக்கிறார். இது என்ன ரசனை?' என சாடி இருக்கிறார். இதுபற்றி பிரபுதேவாவிடம் கருத்து கேட்டபோது,‘என் படங்களை ரொம்பவும் நேர்மையாக இயக்குகிறேன். மற்றவர்களின் விருப்பு வெறுப்பு என்பது பொதுவான விஷயம். எனது கடமையை நான் செய்கிறேன்' என்றார் .
இன்றைய சூடான செய்திகள்....

No comments:
Post a Comment