திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கருப்புக்கொடி காட்டிய மதிமுக-வினர் போராட்டத்தை படம் பிடித்த தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ராஜபக்சேவுக்கு மதிமுக-வினர் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய ஆந்திர போலீசார் சரமாரியாக அடித்து கைது செய்தனர்.
கருப்புக்கொடி போராட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த சன் செய்தியாளர் குணசேகரன் உள்ளிட்ட தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் கொடூர தாக்குதலில் ஈடுப்பட்டனர். செய்தியாளரின் கேமரா, மைக் போன்றவற்றையும் உடைத்து எறிந்தனர். 4 மணி நேரமாகியும் பத்திரிக்கையாளர்கள் விடுதலை செய்யப்படாததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு வைகோ, வேல்முருகன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்றைய சூடான செய்திகள்...

No comments:
Post a Comment