Friday, November 5, 2010
Youtube விடியோக்களை ஆன்லைன்லயே டவுன்லோட் செய்யலாம் வாங்க
நாம் இதுவரையில் விடியோக்களை 'டவுன்லோட்' செய்ய பல டவுன்லோட் மென்பொருட்களை பயன் படுத்தி வந்தோம். ஆனாலும், youtube போன்ற பல தளங்களில் விடியோக்களை பார்க்க மட்டுமே முடியும் டவுன்லோட் செய்யும் வசதி கிடையாது . ஆனால் 'internet download manager ' , 'GetGo youtube downloader ' போன்ற மென்பொருட்கள் இது போன்ற விடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதியை கொடுத்தாலும் 'internet download manager ' இலவச மென்பொருள் கிடையாது என்பதாலும் அது தவிர மென்பொருட்களை டவுன்லோட் செய்து அதை இன்ஸ்டால் செய்து அதுக்கு வேற நமது கணினியில இடம் கொடுக்கணும் . இதாவது பரவால்லங்க மென்பொருள டவுன்லோட் செய்ய போன இடத்துல இலவசமா வைரஸ் வாங்கி அதானால கணினி போச்சு , நாம சேமிச்சு வச்ச files போச்சு, documents போச்சு, வீடியோ போச்சு, ஆடியோ போச்சு எல்லாம் போச்சுன்னு இன்னும் போலம்பவே வேணாம்ங்க இதுக்காகவே ஒரு இணையத்தளம் இருக்குங்க அங்க போய் ஆன்லைன்லயே டவுன்லோட் செய்யலாம் . சரி வாங்க எப்படின்னு பார்க்கலாம் ...
முதலில் இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க http://catchvideo.net/ இப்போது இந்த இனைய தளத்தின் உள்ளே செல்லுங்கள் .(இந்த இணையத்தளம் தவிர இந்த இணையத்தளங்களும் http://www.savevid.com/ , மற்றும் http://www.savevideodownload.com/download.php இந்த வசதியை கொடுகிறது)
இங்கு நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு URL என்று கேட்டு இருக்கும் இடத்தில் பேஸ்ட் செய்யவும் .
அடுத்து catch என்பதை க்ளிக் செய்யவும் .
அடுத்து உங்களுக்கு எந்த வகை விடியோ வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளவும் .
அவ்ள்ளவு தான் உங்கள் விடியோ டவுன்லோட் ஆகிவிடும் .
எப்படிங்க இன்னும் youtube வீடியோ டவுன்லோட் பண்ண முடியல்லன்னு கவல படாதீங்க சரியா ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல தகவல் .. அதுக்காகவே வாக்கு அள்ளிப் போட்டிருக்கு அப்படியே இன்ட்லியின் தனி மடல் பகுதியில் போய் பாருங்க...
ReplyDeletevery super !
ReplyDeletethanks
@ம.தி.சுதா
ReplyDeleteநன்றி நண்பா...