Monday, November 1, 2010
எந்திரனில் சங்கர் செய்த மாபெரும் பிழை ....
எந்திரன் வெளியான தினம் சாதரணமாக திரைப்படங்கள் வெளிவரும் நாளாகவா இருந்தது இல்லவே இல்லை ... அது ஒரு திருவிழா நாள் போன்று தான் தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு வெளிவரும் தருணம் நாடே அந்த வழக்கின் தீர்ப்பை பற்றி பேச ஆதைஎல்லாம் தூக்கி சாபிட்டு விட்டு இந்திரன் பேச்சு தான் மேலோங்கி நிற்கும் அளவுக்கு இந்திரன் செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை விட முகியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது தான் உண்மை . 160 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் முதல் விஞ்ஞான திரைப்படமாக வெளிவந்து உலகெங்கும் 3000 திரியாரங்குகளில் திரையிடப்பட்டு இன்று ஆனைத்து இந்திய மொழி திரைப்படங்களின் சாதனைகளையும் முறியடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் எந்திரனில் சங்கரின் கவனக்குறைவால் ஒரு மாபெரும் தவறு நடந்து உள்ளது .அவை ...
வசீகரனால் செயல் இழக்க செய்து வீசப்படும் சிட்டி ரோபோவை கைபற்றும் ப்ரோப்பசர் குணா அதுக்கு நூறு மனிதர்களோட அழிக்கும் சக்தியை கொடுக்கும் பொது இப்படி பேசுகிறார் " பிஸ்னஸ் என் பிஸ்னஸ் கு இவன்தான் வெள்ளோட்டம் ....பலன் எனக்கு பழி டாக்டர் வசீகரனுக்கு .." இப்படி பேசுவார் வீடியோ இணைத்துள்ளேன் பார்க்கவும் ....
இறுதியில் நீதிமன்ற கட்சியில் ரோபோ பேசும் பொது " நடந்த தவறுக்கெல்லாம் காரணம் வசீகரன் இல்லை ப்ரோப்பசர் போஹ்ரா தான் அதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு " என்று கூறி தனது மெமரியிலிருந்து போட்டு காட்டும் வீடியோ காட்சியில் " பலன் எனக்கு பழி அந்த வசீகரனுக்கு " என்று காட்டப்படுகிறது டாக்டர் வசீகரன் அந்த வசீகரனாக மாறி விடுகிறார் .வீடியோ இணைத்துள்ளேன் பார்க்கவும் ....
இது சின்ன தவறுதான் எண்டாலும் நீதிமன்ற காட்சியல்லவா அது மட்டுமா ரோபோவே இப்படி மாற்றி சொல்லலாமா ....
சங்கர் சார் உங்களின் அடுத்தடுத்த படைப்புகளில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்....
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கண்டுபிடிப்பு நண்பா... சூப்பர்...
ReplyDeleteஇந்தப் பதிவில் நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு:
// நடந்த தவறுக்கெல்லாம் காரணம்வசீகரன் இல்லை ப்ரோப்பசர் குணா தான் அதுக்கு என்கிட்ட ஆதானம் இருக்கு //
அவருடைய பெயர் ப்ரொபசர் போஹ்ரா ங்க...
எழுத்துப்பிழைகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்...