திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களைப் பாராட்டுவதில் வைரமுத்து வஞ்சனை காட்டுவதில்லை. அப்படி இவரிடம் சமீபத்தில் பாராட்டுப் பெற்றவர் தாஜ் நூர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற வம்சம் படத்தின் இசையமைப்பாளர் இவர். ரஹ்மானிடம் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். தனியாக படங்கள் செய்தாலும், இப்போதும் ரஹமான் அழைத்தால் அவருக்கு உதவத் தயங்காதவர்.
முதல் முதலில் தாஜ் நூர் இசையமைத்த படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி. இந்தப் படத்தில் இவர் ஒரு பாடல் முழுக்க காமத்துப் பால் அத்தியாயத்தில் இடம்பெறும் குறள்களை வைத்தே ஒரு அட்டகாசமான டூயட் போட்டுள்ளார்.
களவாணி படம் தயாரித்த நஸீரின் அடுத்த படமான எத்தனுக்கும் இவர்தான் இசை.
வம்சம் படத்தில் பாடல் எழுத வைரமுத்துவைத் தொடர்பு கொள்ள முயன்றாராம் தாஜ் நூர். ஆனால் கவிப்பேரரசு கிடைத்தபாடில்லை. ஆனால் வம்சம் வெளியான பிறகு, நாம் சேர்ந்து பணியாற்றலாமே என வைரமுத்துவே அழைத்திருக்கிறார்.
அதன் விளைவு, ஈழத் தமிழர் பற்றிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் தாஜ் நூர். நீயே எங்கள் அடையாளம் என்ற இந்த ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்துதான் எழுதியுள்ளார். இசையுடன் அந்தப் பாடல்களைக் கேட்டு மெய் மறந்த கவிஞர், அடுத்து இப்படிச் சொன்னாராம்: "இனிமே நீங்கதான் ஏழைகளின் ரஹ்மான்."
மற்றவை ...

இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்
ஆட்டோ சங்கர் 3 (தொடர் ) மற்றவை ...

No comments:
Post a Comment