சிம்புவிற்கு ரசிகர்கள் தந்த பரிசு!
யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் ‘வானம்'. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து, சிம்பு நடித்த படங்களின் தலைப்புகளை வைத்து பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்து அவருக்கு பரிசாக அளித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
டுவிட்டரில் ‘யுத்தம் செய்Õ படத்தின் காட்சியை வெளியிட்ட சேரன்!
பொதுவாக திரை நட்சத்திரங்கள் தங்களது தகவல்களை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் சேரன் வித்தியசமாக, தனது டுவிட்டர், பேஸ்புக் நண்பர்களுக்காக 'யுத்தம் செய்' படத்தின் பிரத்யேக காட்சியை திரையிட்டுள்ளார். ஏன் இப்படி என்று கேட்டதற்கு வெளியிட்ட காட்சிகள் மூலம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.
காதல் மீது நம்பிக்கை இல்லாதவர் ஜெயம் ரவி!
ஜெயம் ரவி. இது நிறுத்தில் அல்ல படத்தில் தான். பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'எங்கேயும் காதல்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ‘எங்கேயும் காதல்’ படத்தில் காதல் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லாதவராக நடிக்கிறாராம் ஜெயம் ரவி. காதலை வெறுக்கும் ஜெயம் ரவி எப்படி ஹன்சிகா காதல் கொள்கிறார் என்பது பிரபுதேவா ரொமேன்ஸ் கலந்து கொடுத்திருக்கிறாராம்.
இதையும் படியுங்களேன் ....



No comments:
Post a Comment