திருநங்ககைகளை காமெடியாகவும், வில்லத்தனமாகவும் சித்தரித்து வந்த தமிழ் சினிமாவில், முதன் முறையாக அவர்களின் உண்மை நிலையை ஜனரஞ்சகமான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய பத்மா.
இதில் ஒரு திருநங்கையே கதையின் நாயகியாக நடிப்பது மற்றொரு சிறப்பு. கல்கி என்ற திருநங்கை நடிக்கும் 'நர்த்தகி' படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 6ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. எழுத்தாளர் சாருநிவேதிதா, எக்ஸ்னோரா நிர்மல், தமிழச்சி தங்கபாண்டியன், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
இப்படத்தில் கல்கியுடன் நடித்திருக்கும் பல திருநங்கைகளும் இவ்விழாவிற்கு வந்திருந்தார்கள். அதில் ஒருவர் பேசுகையில், இயக்குவது, தயாரிப்பது, நடிப்பது என அத்தனை வேலைகளையும் தைரியமாக செய்யக்கூடியவர் மறைந்த பானுமதி அவர்கள்தான். அந்த வகையில் இதுவரை யாரும் செய்திராத அளவுக்கு அரவாணிகளின் வாழ்க்கையை படமாக்கிய இயக்குநர் விஜய பதமாவும் ஒரு பானுமதிதான். என்று புகழ்ந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பாடல்கள் எழுதுவது எனக்கு ஒரு சவாலாக அமைந்தது. காரணம் ஒரு படத்தில் ஒரு காதல் பாடல், சோகமான பாடல் என்று வெவ்வேறு சூழ்நிலைகள் இருக்கும். இந்த படத்தை பொறுத்தவறையில் அனைத்து பாடல்களும் திருநங்கைகளை பற்றியது. ஒரு திருநங்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும் மாற்றங்களையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் வைத்து இந்த பாடல்களை எழுதியிருக்கிறேன். நான் இதுவரைக்கும் சுமார் 1500 பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் என் மனதிற்கு அருகில் உள்ள பாடல்கள் என்றால் ஐம்பது பாடல்கள்தான் இருக்கும் அதில் நர்த்தகி படத்தின் பாடல்களும் இருக்கும். என்றார் நா.முத்துகுமார்.
எங்களிடம் சொன்ன தேதியில் படத்தை முடித்துகொடுத்தார் விஜய பத்மா. அத்துடன் படத்தின் முதல் பிரதியையும் விரைவாக முடித்துகொடுத்தார். முதல் படமாக இருந்தாலும் அவர் பணிபுரிந்த விதம் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. என்றார் தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா.
நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை கூறிய ஒளிப்பதிவாளர் கேசவன், கொஞ்சம் ஆக்ரோசமாகவே பேசத்துவங்கினார். நாங்கள் அழைத்து இங்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி. வராதவர்களுக்கும் நன்றி. அதிலும் நாங்கள் அழைத்து வராத நடிகர்களுக்கு பெரிய நன்றி. இது சிறிய படம் என்பதால் அந்த நடிகர்கள் இங்கு வரவில்லை. படம் வெளியான பிறகு இப்படத்தை பெரிய வெற்றியடைய செய்து, அந்த வெற்றி விழாவில் அந்த நடிகர்களை அழைத்து மேடையில் அமரவைப்பேன். இதை சவாலாகவே நான் சொல்கிறேன் என்றார்.
இதை படிச்சிட்டீங்களா....
சின்ன சின்ன சினிமா செய்திகள்: சிம்புவிற்கு ரசிகர்கள் தந்த பரிசு!
சென்னையை தொடர்ந்து உலக ரசிகர்களை கலக்கப்போகும் யுவன்
படுக்கை அறை காட்சியில் நடிக்க மறுத்த ஸ்ரேயா
த்ரிஷாவுக்கு கல்யாணமா? எச்சரிக்கும் மம்மி
காவலனின் தடைகள் அனைத்தும் விலகியது.
விமலுக்கு அப்பாவாக பாக்யராஜ்
பாரபட்சம் காட்டுகிறதா சென்சார்? முணுமுணுக்கும் கோடம்பாக்கம்!
- அவன் இவன் ரிலீஸ் எப்போது?
- இறுதிக் கட்டத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு...
- நடிகை சோனாவுக்கு எதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
- நண்பன் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் லாரன்ஸ்!
- கலைஞர் டி.விக்கு ஸ்பெக்ட்ரம் பணம்- திணறும் சிபிஐ
- கமல், செல்வராகவனுடன் இணையும் மூன்றாவது நபர்
- முன்னாள் மனைவியின் உதவியால் பிரகாஷ்ராஜின் பயண"த்தி...
- 'சுத்த தமிழ்ல பேசுங்கப்பா...!' - சிவகுமார்
- 2ஜி ஸ்பெக்ட்ராமுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும்...

No comments:
Post a Comment