நடிகர் விவேக் விரைவில் ஒரு படத்திற்கு இசையமைக்கப் போகிறேன் என்று கிளம்பினால் யாரும் ஆச்சர்யப்பட வேண்டாம். அவர் சிறந்த கீபோர்டு பிளேயர். முன்னணி இசையமைப்பாளர்களே ஆச்சர்யப்படுகிற அளவுக்கு விரல்கள் கோலமிடுமாம் ஆர்மோனியத்தில். அது எப்படி சாத்தியம் என்பதற்கு ஒரு அழகான கதையும் இருக்கிறது. அது விவேக் ரீல் சுற்றாத பிளாஷ்பேக்.
சிறுவயதில் இவருடைய பாட்டிக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிற வழக்கம் இருந்து வந்ததாம். அதற்கு பதிலாக வீட்டிலிருக்கிற ஏதாவது ஒரு பொருளை அடமானம் வைத்துவிட்டு போவார்களாம். என்ன கஷ்ட காலமோ, ஒரு சங்கீத வித்வான் தன்னுடைய ஆர்மோனியத்தை அடகு வைத்தாராம். பணத்தை வாங்கிக் கொண்டு போனவர் போனவர்தான். திரும்ப வரவேயில்லை. பாட்டியும் வித்வான் வருவார் வருவார் என்று சில வருடங்கள் காத்திருந்து ஒரு வருடத்தில் அதை தூக்கி பரணிலும் போட்டுவிட்டார்.
விவேக் ஆறு வயது குழந்தையாக இருக்கும் போது அந்த ஆர்மோனிய பெட்டி கண்ணில் பட, அத எடுத்துக் கொடு என்று அடம் பிடித்தாராம். சும்மாதான கெடக்கு. பேரன் விளையாடிட்டு போகட்டுமே... என்று பாட்டி எடுத்து விவேக்கிடம் கொடுக்க, அங்கு ஆரம்பித்தது ஒரு ஹார்மோனிஸ்ட்டின் இசைப்பயணம். யார் உதவியும் இல்லாமல் தானே கற்றுக் கொண்டாராம்.
அவர் வாசித்த முதல் பாடல் எது தெரியுமா?
ஆயிரம் தாமரை மொட்டுகளே, வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களேன்...
ரஜினி மனைவி, மகளுக்கு கைது வாரண்ட்! -நீதிமன்றம் உத்தரவு
அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை!!
ரசிகர்களை சந்திக்க நடிகர் விஜய் சுற்றுப்பயணம்
நண்பன் பட விஜய் போட்டோக்கள்
மணிரத்னம் படத்தில் விஜய்-விஷால்? -முனை முறிந்த முயற்சி!
ரஜினி குடும்பத்தாருக்கு வாரண்ட்? -பிரச்சனை முடிவுக்கு வந்தது
இந்திய அழகி சிந்தூரா நடிக்கும் திகில் படம்
No comments:
Post a Comment