Thursday, November 4, 2010
ஒரு பட்டாசு விலை 12 ,000 ரூபாங்க ....
அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவழி என்றாலே நமது எல்லோர் மனதிலும் பொதுவாக தோன்றும் விசயங்களில் முதல் இடத்தில் நிற்பது பட்டாசுகள் தான் .( யாரடா இவன் யார் சொன்ன முதல்ல பட்டாசு தான் மனசுல வரும்னு எங்களுக்கு எல்லாம் தீபாவளின்னா போனஸ் தான் மனசுக்கு வரும்னு சொல்லுறது கேட்குதுங்க வேற என்ன பண்ணுறது சொல்ல போறது பட்டாசு பத்தின விசயமாச்சே அதான் இப்படி ). சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே பட்டாசும் கையுமாக தான் தெருவெங்கும் பார்க்க முடியுது .
இந்த வருடம் தீபாவளிக்கு புதுவகையான பட்டாசுகள் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. அவைகள்
'தவுசண்ட் ஒண்டர்' ( இதன் விலை ரூ :12,000)
இந்த தீபாவளிக்கு வந்துள்ள பட்டாசுகளிலேயே அதிக விலை கொண்ட பட்டாசு இது தாங்க இதன் விலை தாங்க கொஞ்சம் அதிகம் ஆமாங்க இதன் விலை பனிரெண்டாயிரம் ரூபாங்க இந்த பற்ற வைத்தால் இது மேலே சென்று வண்ண வண்ண ஒளிச்சிதரல்களுடன் 1000 முறை வெடிக்கும் ( அப்போ இந்த ஒரு பட்டாசே போதுமல்ல ) இதுக்கு ரெண்டு திரி இருக்குங்க ஒன்ன பத்த வைத்தால் ஒவ்வொரு முறையாக 1000 தடவை வெடிக்கும் இன்னொரு திரியை பற்ற வைத்தால் இரண்டு இரண்டு வெடியாக 500 தடவை வெடிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏர் டிராபிக்
இது பூந்தொட்டி போல் வெடித்து ப்சச்ச்சி சிகப்பு வண்ணங்களில் சிதறும்
சூப்பர் சொனிக்
சுமார் இரண்டு அடி நீளம் கொண்ட இந்த வெடி 5 ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடிப்பது போன்று பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் .( அப்போ இரவு வெடிக்க முடியாது யாராவது இரவு வேடிசிடாதீன்கப்பா )
டிஸ்கவரி 520
இது விதவிதமான சத்தத்தை எழுப்பியவாறே ராக்கெட் போல மேலே சென்று வண்ணவண்ண மலர்கள் பூத்து குலுங்குவது பொல்லா அழகான வண்ணங்களை வெளிப்படுத்தி மத்தாப்புகளை பொழியும் . இதன் விலை ரூ.7 ஆயிரம்.
பிஷ்டேங்க்
இந்த புதுரக பேன்சி பட்டாசு 15 அடி உயரத்துக்கு மேலே சென்று அங்கே தண்ணீர் தொட்டியில் மீன்கள் நீந்தி விளையாடுவது போல துள்ளி துள்ளி விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது .
ஜம்பர்
இந்த வெடி தவளையைப் போல் துள்ளி சென்று ஓசை எழுப்பும். 5 முத்த 6 முறை துள்ளி செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அவதார்
அரை அடி உயரம் கொண்ட இந்த வெடி 30 அடி உயரத்துக்கு சென்று சிவப்பு, மஞ்சள், பச்சை,வெள்ளை, ஊதா வண்ணங்களில் வெடித்து சிதறும் மேலே சென்றதும் ஆறு பிரிவுகளாக பிரிந்து வண்ண ஜாலங்கள் புரியும் .
ஜுவல்பாட் (தங்கப்பானை)
இது பூந்தொட்டி போல வெடித்து சிதறும் சிலிண்டர் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் பூக்களை பொழியும்
விசிலிங் பைப்
பொதுவாக கம்பிமத்தாப்புகளை கொளுத்தினால் பல கலரில் எரியும். இந்த புதுவகை கம்பிமத்தாப்புகளை கொளுத்தினால் வண்ணங்களை வெளிப்படுத்துவதுடன் கூடவே விசில் சத்தத்தையும் எழுப்பும்.
மியூசிக் சக்கார்
சங்கு சக்கரம் போல் , எடது மற்றும் வலது புறமாக சுர்ருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது . ஆனால் விதம் விதமான சத்தங்களையும் எழுப்பியப்படி நான்கு திசைகளிலும் பூக்களை வீசியப்படி அழகாக சுழலும் .
இப்படி புது புது விதமா பட்டாசுகள் வந்திருக்குங்க ஆனா எல்லாம் வாங்கணும் தான் ஆனா விலை தான் கொஞ்சம் அதிகம் இல்லையா....?
அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment