ரஜினி வாழ்க்கை குறிப்பு : | |
நிஜப்பெயர் | சிவாஜிராவ் கெய்க்வாட் |
சினிமாப் பெயர் | ரஜினிகாந்த் (1975ல் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகம் ஆகும்போது படத்தின் டைரக்டர் கே. பாலச்சந்தர் சூட்டிய பெயர்) |
தந்தை பெயர் | ரானோஜிராவ் (மராட்டியரான இவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் 'செட்டில்' ஆகி போலீஸ்காரராக பணியாற்றியவர்) |
தாயார் பெயர் | ராம்பாய் |
பிறந்த தேதி | டிசம்பர், 12ம் தேதி, 1950 |
பிறந்த இடம் | பெங்களூர் |
உடன் பிறந்தவர்கள் | மொத்தம் 4 பேர், சத்யநாராயணராவ் - அண்ணன் நாகேஸ்வரராவ் - அண்ணன் அஸ்வத்பாலுபாய் - சகோதரி ரஜினி |
படிப்பு | பி.யு.சி அதன்பிறகு பெங்களூரில் அரசு பஸ்ஸில் நடத்துநர். பிறகு நடிப்பு ஆசையில் சென்னை வந்து, நடிப்பு பயிற்சி கல்லூரியில் படிப்பு. |
முதல்படம் | 'அபூர்வ ராகங்கள்' வில்லன் வேடம். 15.08.1975ல் வெளிவந்தது |
முதல் கதாநாயகி | ஸ்ரீவித்யா |
கதாநாயகனாக நடித்த முதல் படம் | 'பைரவி' |
திருப்புமுனை படங்கள் | கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு', பாரதிராஜாவின் '16 வயதினிலே', கலைஞானத்தின் 'பைரவி' |
திருமணம் | காதல் திருணம் 1980ம் ஆண்டு திருப்பதியில் இவருக்கும் லதாவுக்கும் திருமணம் நடந்தது. சிரிப்பு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மனைவி சுதாவின் உடன் பிறந்த சகோதரிதான் லதா. |
குழந்தைகள் | ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று இரண்டு மகள்கள் .(ஐஸ்வர்யாவுக்கு நடிகர் தனுஷ்-டன் திருமணமாகி விட்டது. ஐஸ்வர்யா கிராபிக்ஸ் டிசைன் படித்துள்ளார்) |
பிடித்த உடை | சர்வாணி, குர்தா, ஜிப்பா |
பிடித்த நிறம் | கறுப்பு அடுத்து வெள்ளை |
பிடித்தது | தனிமை. படப்பிடிப்பு இல்லாவிட்டால் தனிமையாக இமயமலை அடிவாரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு சென்று தியானம் செய்வது, தன்னந்தனியாக வெளிநாட்டுக்கு சென்று நடந்து செல்வது |
ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ரஜினி படித்துக் கொண்டிருந்தபோது ஃபீஸ் கட்ட முடியாத பல தருணங்களில் பிரின்சிபல் ராஜாராம்தாஸே பணத்தைக் கட்டினார்.
ரஜினி தமிழ் சினிமாவுலகிற்கு 1975-ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் அறிமுகமாகும் ரஜினிகாந்திடம் நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கலாம் என்று 'அபூர்வ ராகங்கள்' வெளியாவதற்கு முன்பு அளித்த பேட்டியில் இயக்குனர் கே.பாலச்சந்தர் கூறியிருந்தார்.ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நண்பரான நட்ராஜை தனது படங்களில் நடிக்க வைத்ததோடு, 'அன்புள்ள ரஜினிகாந்த்' மூலம் அவரை இயக்குனாராக்கி அழகு பார்த்தவர்தான் ரஜினி.
சினிமாவில் பிரபலமடைந்த பின்னால் ரஜினி முதலில் வாங்கியது டி.எம்.யு. 5004 என்ற நம்பர் கொண்ட ஃபியட் கார்.
வில்லனாக அல்லாமல் ரஜினி முதன் முதலாக குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் 'கவிக்குயில்'.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்த படம் 'தில்லு முல்லு'.
ரஜினி முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்து மகத்தான வெற்றி பெற்ற படம் 'பில்லா'.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக சொந்தமாக தயாரித்த 'மாவீரன்' படம் 1986 ஆம் ஆண்டு வெளியானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முதல் வண்ணத் திரைப்படம் '16 வயதினிலே' 1977 ஆம் ஆண்டு வெளியானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் மூன்று வேடங்களில் நடித்த 'மூன்று முகம்' திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வெளியானது.
சினிமாவில் ரஜினியை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் என்றால், 'பைரவி' படத்தின் மூலம் அவரை ஒரு கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் கதாசிரியர் கலைஞானம்.
ரஜினி கதாநாயகனாக அறிமுகமான 'பைரவி' படத்துக்காக கதாசிரியர் கலைஞானத்திடம் இருந்து வாங்கிய முதல் பெரிய அட்வான்ஸ் தொகை ரூ.5,000.
மகேந்திரன் இயக்கிய ரஜினியின் 'முள்ளும் மலரும்' படத்தின் முக்கிய காட்சி ஒன்று கமல்ஹாசனின் சொந்த செலவில் எடுக்கப்பட்டது.
சினிமா மட்டுமின்றி சிறந்த தமிழ் இலக்கியங்களைப் படிப்பதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிக அதிக அளவில் ஆர்வம் உண்டு.
ரஜினி முதன்முதலில் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது 'முள்ளும் மலரும்' படத்துக்காக
'மூன்று முகம்' படத்தில் வரும் 'டிஎஸ்பி அலெக்ஸ் பாண்டியன் பேரைச் சொன்னால்...' என்று தொடங்கும் டயலாக்கை படப்பிடிப்பில் ரஜினியே சொந்தமாக சொன்னார்.
ரஜினி நடித்த படங்களிலேயே அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த படம் 'மூன்று முகம்'.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து மொத்தம் 25 படங்கள் எடுத்த ஒரே சாதனை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
ரஜினியின் படிப்பு முதலிய செலவுக்காக உதவிய பெங்களூரில் பஸ் டிரைவராக இருந்த ராஜ்பகதுர் தான் ரஜினியை உரிமையோடு இப்போதும் 'டா' போட்டு அழைக்கும் நணபர்.
ரஜினி முதன்முதலாக ஹீரோ ஆக நடித்த 'பைரவி' படத்தின் போஸ்டரில் முதன்முதலாக 'தி கிரேட் சூப்பர் ஸ்டார் ரஜினி' என்று அச்சிட்டு ஒட்டப்பட்டது.
ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று சினிமா ஸ்கிரீனில் முதல் முறையாக போடப்பட்ட படம், 'நான் போட்ட சவால்'.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இதுவரை வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை 175.
ஏ.வி.எம். தயாரித்து ஷங்கர் இயக்கிய 'சிவாஜி' திரைப்படம் தான் டப்பிங் இல்லாமல் ரஜினியின் 100-வது நேரடி தமிழ் திரைப்படம்.
ரஜினி கெளரவ வேடத்தில் நடித்து சென்சார் செய்யப்பட்டும் கூட வெளிவராத படத்தின் பெயர் 'மனைவி உருவாகிறாள்'.
இந்தியாவிலேயே அதிக ரசிகர் மன்றங்களை கொண்டவர் ரஜினி மட்டுமே. மொத்த மன்றங்கள் 50 ஆயிரத்துக்கும் மேல்.
25 ஆண்டுகள் முடிந்து 2000 ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது திரை உலக வெள்ளிவிழாவைக் கொண்டாடினார். இப்போது 35 வருடம் ஆகிறது .
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 86 படங்கள் இதுவரை தமிழில் இருந்து வேறு மொழிகளுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினி 1989-ம் ஆண்டு தமிழக அரசின் எம்.ஜி.ஆர். விருதைப் பெற்றார்.
ரஜினி நடித்த 'முத்து' படம் தான் ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
ரஜினி நடித்த ஆங்கிலப் படமான 'பிளட் ஸ்டோன்' 1988-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வெளியானது.
முள்ளும் மலரும் படத்தில் தனது நடிப்பை பாராட்டி இயக்குனர் கே.பாலச்சந்தர் எழுதிய கடிதத்தை பொக்கிஷமாக வைத்துள்ளார் ரஜினி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிடித்த இந்திய நடிகர் கமல்ஹாசன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த நடிகை இந்தியில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ரேகா.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரொமான்டிக்கான வேடங்களில் நடிப்பதுதான் மிகவும் பிடிக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டாலன்.
கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் ஜெயகாந்தனின் அம்மா வந்தாள் ஆகியவை ரஜினிக்கு மிகவும் பிடித்த நாவல்கள்.
நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து ரஜினிக்கு மிகவும் பிடித்த விஷயம் பஞ்சுவாலிட்டி.
சிவாஜி கணேசனை தமிழ் சினிமாவின் அகராதி என்று கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி சிங்கப்பூரின் லீ குவான் யு Lee Quan-u
மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்மவிபூஷன் விருதை 2000 ஆண்டில் பெற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
அதிக எண்ணிக்கையிலான சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.
இசைஞானி இளையராஜாவை 'சாமி' என்றே மரியாதையுடன் ரஜினிகாந்த் அழைப்பார். ( சாமிக்கு நேர்ல திருமண அழைப்பிதள் கொடுக்க முடிமா அதான் போஸ்ட்ல அனுபினது இத கூட யாருமே புரிஞ்சுக்கல்ல...)
இமயமலைக்கு போகும்போது வெட்கம், அகங்காரம், போட்டி, பொறாமைன்னு எதுவுமே இல்லாம மனசு லேசாகிடும் என்று கூறியிருக்கிறார் ரஜினி.
இன்றைக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கும் ரஜினி, அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தில் வாங்கிய முதல் சம்பளம் வெறும் ரூ.500
ஆரம்பத்தில் தனது வரவு செலவு கணக்குகளை கர்நாடக வங்கியிலேயே செய்து வந்த ரஜினி, இப்போது இந்தியன் வங்கியிலும் வாடிக்கையாளராக இருக்கிறார்.
பர்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கமில்லாத ரஜினி, வெளியே செல்லும்போது ரூ.500 தாளை வைத்துக் கொள்வது பழக்கம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை எந்த கிரெடிட் கார்டையும் வைத்திருந்தது கிடையாது.
நகைகள் அணிவது பிடிக்காத ரஜினி மோதிரங்கள் அணிவது ராசிக்காக மட்டும்தான்.
தனது மனம் கவர்ந்தவர்களுக்கு பரிசு கொடுப்பதாக இருந்தால் ரஜினியின் சாய்ஸ் கோல்ட் செயின் தான்.
ரஜினி இதுவரை நடித்துள்ள படங்கள் ‘எந்திரன்’ வரை 153. இதில், கன்னடம் (11), மலையாளம் (2)தெலுங்கு (16), இந்தி (22), பெங்காலி (1), ஆங்கிலம் (1) ஆகிய படங்களும் அடங்கும்.
|
ரஜினிகாந்த் நடித்த படங்களின் விருதுகள் | ||
1975 | ||
தேசிய விருது | சிறந்த தமிழ் படம் | அபூர்வ ராகங்கள் வெள்ளி தாமரை பரிசு |
பிலிம் பேர் | சிறந்த தமிழ் படம் | அபூர்வ ராகங்கள் |
அரிமா சங்கம் | சிறந்த தமிழ் படம் | அபூர்வ ராகங்கள் |
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | அபூர்வ ராகங்கள் வெள்ளி தாமரை பரிசு |
பிலிமாலயா | சிறந்த தமிழ் படம் | அபூர்வ ராகங்கள் வெள்ளி தாமரை பரிசு |
சினிமா எக்ஸ்பிரஸ் | சிறந்த தமிழ் படம் | அபூர்வ ராகங்கள் வெள்ளி தாமரை பரிசு |
1976 | ||
பிலிம்பேன்ஸ் | சிறந்த தெலுங்கு படம் | சிலகம்மா செப்பந்தி சான்றிதழ் |
1977 | ||
தமிழ் நாடு அரசு | சிறந்த தமிழ் படம் | புவனா ஒரு கேள்விக்குறி |
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | புவனா ஒரு கேள்விக் குறி |
தமிழ்நாடு அரசு | சிறந்த தமிழ் படம் | 16 வயதினிலே |
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | 16 வயதினிலே |
அரிமா சங்கம் | சிறந்த தமிழ் படம் | 16 வயதினிலே |
1978 | ||
தமிழ் நாடு அரசு | சிறந்த தமிழ் படம் | இளமை ஊஞ்சலாடுகிறது |
தமிழ் நாடு அரசு | சிறந்த தமிழ் படம் | சதுரங்கம் |
தமிழ் நாடு அரசு | சிறந்த தமிழ் படம் | முள்ளும் மலரும் |
பிலிம்பேர் | சிறந்த தமிழ் படம் | முள்ளும் மலரும் |
சினிமா எக்ஸ்பிரஸ் | சிறந்த தமிழ் படம் | முள்ளும் மலரும் |
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | முள்ளும் மலரும் |
லயன்ஸ் கிளப் | சிறந்த தமிழ் படம் | முள்ளும் மலரும் |
தமிழ் நாடு அரசு | சிறந்த தமிழ் படம் | அவள் அப்படித்தான் |
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | ப்ரியா |
1979 | ||
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | ஆறிலிருந்து அறுபது வரை |
1980 | ||
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | முரட்டுக்காளை |
1982 | ||
தமிழ் நாடு அரசு | சிறந்த தமிழ் படம் | எங்கேயோ கேட்ட குரல் |
பிலிம்பேர் | சிறந்த தமிழ் படம் | எங்கேயோ கேட்ட குரல் |
தமிழ்நாடு பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | எங்கேயோ கேட்ட குரல் |
தமிழ் நாடு அரசு | சிறந்த தமிழ் படம் | மூன்று முகம் |
1985 | ||
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | அன்புள்ள ரஜினிகாந்த் |
பிலிம்பேன்ஸ் | சிறந்த தமிழ் படம் | உன் கண்ணில் நீர் வழிந்தால் |
1989 | ||
சாந்தோம் கலைவிருது | சிறந்த தமிழ் படம் | ராஜா சின்ன ரோஜா |
1991 | ||
சாந்தோம் கலை விருது | சிறந்த தமிழ் படம் | தளபதி |
1996 | ||
சினிமா எக்ஸ்பிரஸ் | சிறந்த தெலுங்கு படம் | பெத்தராயுடு |
சினிமா ரசிகர் சங்கம் | சிறந்த தெலுங்கு படம் | பெத்தராயுடு |
சூப்பர் ஸ்டார் முதல்வராக பதவி ஏற்கும் அறிய புகைப்படங்கள் மிக விரைவில் நமது வலை தளத்தில் வெளியிடப்படும் . ஆனால் , அந்த படங்கள் எப்போ வரும் எப்படி வரும்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல வரும் எல்லாம் கடவுள் கைல இருக்குங்கோ.........
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
Thank u boss. My name is logu my age is 28. my starting age to still now i am in thaliver fan. I saw all thaliver movies 10 to 25 times. except mullum malarum, thilum mullum,annamalai,bashaza, muthu, padaiappa, sivaji. Becos this all movies how many times i have seen i dont know. may be 25 to 50 times. Now i am watching endhiran alreday 10 times i watched. Once again Thank u ver much and i dowloaded all photos.
ReplyDeleterealy super thank u very much
ReplyDeletehttp://tamilmovies.ebest.in/tamil-movie-reviews/latest-tamil-movie-reviews/review.html
ReplyDeleteThe tamil movies function......